கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

20 ஆண்டுகளுக்குப் பிறகு! வரும் நவ.28-ல் பாலஸ்தீனத்தில் தேர்தல்!

பாலஸ்தீனத்தில் வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவது குறித்து...

News image

பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ்... - கோப்புப் படம் | AP

Updated On :10 ஜூலை 2026, 12:46 pm IST

பாலஸ்தீனத்தில் வரும் நவம்பர் 28 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அறிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், கிளர்ச்சிப்படையான ஹமாஸ் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படைக்கும் இடையே நடைபெற்று வந்த தொடர் போரினால், தேர்தல் நடத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அதிபர் அப்பாஸின் ஃபடாஹ் கட்சியைத் தேற்கடித்து ஹமாஸ் வெற்றி பெற்றதால், அந்தக் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. மேலும், கடந்த 2007 ஆம் ஆண்டு காஸா முழுவதும் ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

காஸா உள்ளிட்ட பாலஸ்தீனத்தின் அனைத்து பகுதிகளில் வகித்து வந்த பதவிகளில் இருந்து ஹமாஸ் அமைப்பு விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் நவம்பர் 28 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அறிவித்துள்ளார்.

இதையடுத்து, ஜெருசலேம், மேற்கு கரை மற்றும் காஸா உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளில் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

President Mahmoud Abbas has announced that parliamentary elections will be held in Palestine on November 28.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.