இந்தியாவில் நடைபெறும் தேர்தல் முறைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் தேர்தல் முறைகள் மற்றும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோரைக் குறிப்பிட்டு, பாராட்டுத் தெரிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட். மேலும், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ஜார்ஜியோ கோருடன் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “நடப்பு மாதத்தின் தொடக்கத்தில் இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், எங்கள் நிர்வாகிகளிடம் 'செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எப்படித் தேர்தல்களை நடத்த முடியும்?' என்று கேட்டார்.

இந்தியாவில் கடந்த பொதுத் தேர்தலில் 64.60 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர்!. 1 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே தபால் வாக்குகளைச் செலுத்தியிருந்தனர்.
ஒவ்வொரு வாக்காளரும் செல்லுபடியாகும் வகையிலான புகைப்பட அடையாள அட்டையையும் வைத்திருந்தனர். இதனால், நாம் ‘அமெரிக்காவைக் காப்பாற்றுவோம் - சேவ் அமெரிக்கா’ சட்டத்தை நிறைவேற்றுவோம்” என பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவைக் காப்பாற்றுவோம் என்ற சட்டம் தேர்தல்களில் நடைபெறும் மோசடிகளைத் தவிர்க்க உதவும் என்று கூறியுள்ள அதிபர் டிரம்ப், வாக்காளர்களுக்கு குடியுரிமைச் சான்றிதழைக் கட்டாயமாக்கி, தபால் வாக்குமுறையை கடுமையாக்க நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இருப்பினும், இந்த மசோதா ஜனநாயகக் கட்சியிடமிருந்து எதிர்ப்பையும், குடியரசுக் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
U.S. Ambassador Gor posts a pic with Indiaâs Chief Election Commissioner Gyanesh Kumar after President Trump cites Indiaâs voter ID laws as an example for America pic.twitter.com/pHLSjHnRH8
— Shashank Mattoo (@MattooShashank) August 18, 2026
Summary
US President Donald Trump has cited India's voter identification system and low use of postal ballots to renew his call for the passage of the SAVE America Act, which would introduce stricter voting requirements in the United States.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




