வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொடுள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டார்வினில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்தத் தோல்வி எதிரொலியாக இரண்டாவது டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி மாற்றங்களுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு அணிகளும் சனிக்கிழமை வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள மெக்கேயில் நடைபெறுகிறது. இரண்டாவது டெஸ்ட் தொடருக்கான 13 பேர் கொண்டு அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இதில், முதல் டெஸ்ட்டில் சொதப்பிய தொடக்க ஆட்டக்காரர் ஜேக் வெதரால்டை நீக்கிவிட்டு மேட் ரென்ஷாவை மீண்டும் அணியில் சேர்த்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்த வெதரால்ட், இரண்டாவது இன்னிங்ஸில் ரன் எதுவும் எடுக்கவில்லை. அவர் கடைசியாக விளையாடிய 12 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 20.36 ரன்கள் சராசரியை மட்டுமே கொண்டுள்ளார்.
இரண்டு இன்னிங்ஸ்களில் முறையே 1 மற்றும் 31 ரன்கள் எடுத்த மார்னஸ் லாபுசேன் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேர் ரென்ஷா, டிராவிஸ் ஹெட்டுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமான மேட் ரென்ஷா, 2018 ஆம் ஆண்டு அணியிலிருந்து கலட்டிவிடப்படும் வரை 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அவர் 14 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதத்துடன் 29.31 சராசரியைக் கொண்டுள்ளார். கடைசி 10 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடியிருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணி விவரம்: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மார்னஸ் லாபுசேன், நாதன் லயன், ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.
Summary
Australia's has dropped Jake Weatherald and recalled Matt Renshaw in a bid to stabilize the top order and try to level the two-match series after a shocking loss to Bangladesh in the first cricket test on the weekend. Australia announced a 13-man squad on Tuesday, with only the one change for the second test in Mackay, in northern Queensland state, starting Saturday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

31 ஆண்டுகளில் முதல் முறை... சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்த வங்கதேசம்!

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய தன்சித் ஹாசன்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணி அறிவிப்பு!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!


