பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று குடமுழுக்குஇன்று பிரதமா் மோடி பிறந்த நாள்: வாரணாசியில் பிரம்மாண்ட விழாஇன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா் விஜய்!கைதிகளைக் கண்காணிக்க ஆயுதப் படைக் காவலா்கள் சீருடையில் கேமரா

ஒரேயொரு மாற்றம்தான்; நாதன் லயனுக்கு மீண்டும் வாய்ப்பு..! 2ஆவது டெஸ்ட்டுக்கான ஆஸி. அணி!

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி குறித்து...

Inclusion of Matthew Renshaw in the playing XI.

மேத்திவ் ரென்ஷா பிளேயிங் லெவனில் சேர்ப்பு. - படம்: எக்ஸ்/ கிரிக்கெட்.காம்.ஏயு

Published On :

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நாதன் லயன் இருக்கமாட்டார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் வென்று வரலாறு படைத்தது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஆக.22) மேக்கே திடலில் நடைபெற இருக்கிறது. இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய ரசிகர்கள் இதனை ஜியோ ஹாட்ஸ்டார் செயலில் பார்க்கலாம்.

முதல் டெஸ்ட்டில் தோல்வியுற்ற பிறகு, தொடக்க வீரர் ஜேக் வெதரலால்டு நீக்கப்பட்டு மேத்திவ் ரென்ஷா சேர்க்கப்பட்டுள்ளார். நாதன் லயனுக்குப் பதிலாக ஸ்காட் போலாண்ட் சேர்க்கப்படுவார் என சில மணி நேரமாக தகவல்கள் பரவி வந்தன.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி நாதன் லயனை பிளேயிங் லெவனில் சேர்த்து 11 வீரர்களை அறிவித்துள்ளது. இதில் மாட் ரென்ஷா மட்டுமே புதியதாக சேர்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி: டிராவிஸ் ஹெட், மேத்திவ் ரென்ஷா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, பியூ வெப்ஸ்டர், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.

Summary

After some speculation, Nathan Lyon has held his spot in the Australian team for the second Test v Bangladesh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.