ஆஸ்திரேலிய மண்ணில் வங்கதேச அணி தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்து வரலாறு படைத்துள்ளது.
கடந்த ஆக.13ல் டார்வினில் தொடங்கிய இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 426 ரன்கள் குவித்தது. அடுத்ததாக ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனால் 57 ரன்கள் என்ற எளிய இலக்கை வங்கதேச அணி 14.2 ஓவர்களில் அடித்து வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது. மோமினுல் ஹக் 30, சத்மான் இஸ்லாம் 25 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்கள்.
முதல் இன்னிங்ஸில் மஹ்முத் ஹாசன் 6 விக்கெட்டுகள் எடுக்க, இரண்டாவது இன்னிங்ஸில் மெஹதி ஹாசன் மிராஜ் 5 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள்.
ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியிருக்கும் வங்கதேசம் அனைத்து நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது என வர்ணனையாளர்கள் கூறி வருகிறார்கள்.
மூன்று போட்டிகளிலேயே வங்கதேசம் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அதிலும் மொத்தமாக ஏழு போட்டிகளில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மிர்பூரில் 2017ல் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது.
Historic Win in Darwin! ð§ð©ð¥ Bangladesh beat Australia by 9 wickets to seal a memorable victory in the 1st Test! ðð#Bangladesh #Tigers #BANvAUS #Cricket pic.twitter.com/PDrWJS8ZEs
— Bangladesh Cricket (@BCBtigers) August 16, 2026
Summary
Bangladesh history chased their first-ever Test victory on Australian soil
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டேடிஸ் ஆர்மியாக மாறிய ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி..! சிஎஸ்கே போல சாதிக்குமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் சேர்ப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணி அறிவிப்பு!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



