ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
வங்கதேச அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் சேர்க்கப்பட்டுள்ளது அந்த அணிக்கு பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.
31 வயதாகும் லிட்டன் தாஸ் கடந்த ஜூன் மாதத்திலிருந்து காயம் காரணமாக கிரிக்கெட் விளையாடவில்லை. தற்போது, அவர் காயத்திலிருந்து மீண்டுள்ளதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேச அணி ஆஸ்திரேலியா சென்றடைந்த நிலையில், விரைவில் லிட்டன் தாஸும் அணியுடன் இணையவுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணி விவரம்
நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), சௌமியா சர்க்கார், ஷாத்மன் இஸ்லாம், தன்சித் ஹாசன், மோமினுல் ஹேக், முஷ்பிகர் ரஹீம், அமித் ஹாசன், ஜேக்கர் அலி, மெஹிதி ஹாசன் மிராஸ் (துணைக் கேப்டன்), தைஜுல் இஸ்லாம், டஸ்கின் அகமது, ஹாசன் மஹ்முத், சையத் அகமது, ஹொசைன் சௌதரி, முஷ்ஃபிக் ஹாசன், லிட்டன் தாஸ்.
Summary
Litton Das has been included in the Bangladesh squad for the Test series against Australia.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
யார் இந்த சரண்ஷ்? இந்திய டெஸ்ட் அணியில் 33 வயது ஆல்ரவுண்டர்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணி அறிவிப்பு!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
முஸரபானி, ந்கரவா அசத்தல்! டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய ஜிம்பாப்வே!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




