நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

சொந்த மண்ணை எங்களுடைய கோட்டையாக மாற்ற வேண்டும்: மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன்

சொந்த மண்ணை நம்முடைய கோட்டையாக மாற்ற வேண்டும் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ராஸ்டன் சேஸ் தெரிவித்துள்ளார்.

News image

மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் ராஸ்டன் சேஸ் - படம் | AP

Updated On :1 ஆகஸ்ட் 2026, 4:01 pm IST

சொந்த மண்ணை எங்களுடைய கோட்டையாக மாற்ற வேண்டும் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ராஸ்டன் சேஸ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 90 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை (ஆகஸ்ட் 2) முதல் தொடங்குகிறது.

இந்த நிலையில், சொந்த மண்ணை எங்களுடைய கோட்டையாக மாற்ற வேண்டும் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ராஸ்டன் சேஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த ஆண்டு 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் தோல்வியடைந்தோம். ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றோம். அந்த தோல்விகளுக்குப் பிறகு அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் அமர்ந்து பேசினோம். சிறப்பாக திட்டங்களை வகுத்து வெற்றி பெற வேண்டும் என ஆலோசனை செய்தோம்.

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. நாங்கள் என்னப் பேசினோமோ அதற்கேற்ப சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும். எங்களது திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்தி இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றி பெற வேண்டும்.

சொந்த மண்ணில் இதுவரை நாங்கள் பெற்றுள்ள வெற்றிகளை நினைத்து மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், சொந்த மண்ணை எங்களது கோட்டையாக மாற்ற வேண்டும். மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணிகள் இங்கு வெற்றி பெறுவது மிகவும் கடினம் என்ற சூழலை நாங்கள் உருவாக்க வேண்டும். ஏனெனில், எதிரணிகளைக் காட்டிலும் இங்குள்ள ஆடுகளங்களின் தன்மை குறித்து எங்களுக்கு நன்றாகத் தெரியும் என்றார்.

Summary

West Indies captain Roston Chase has stated that they must turn their home turf into a fortress.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.