விசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

கடைசிவரை ஆட்டமிழக்காத பாபர் அசாம்..! 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள்!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி குறித்து...

News image

ஜஸ்டின் க்ரீவ்ஸ். - படம்: ஐசிசி

Updated On :29 ஜூலை 2026, 3:19 pm IST

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்று பேட்டிங் செய்த மே.இ. தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 282 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இரண்டாவது இன்னிங்ஸில் மே.இ. தீவுகள் அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக பந்துவீச்சாளர் ஷமேர் ஜோசப் 38 ரன்கள் அடித்தார். அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் மட்டுமே 58 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மே.இ. தீவுகள் அணி சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்டின் க்ரீவ்ஸ் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்ட் போட்டி ஆக.2ஆம் தேதி தொடங்குகிறது.

பாகிஸ்தான் அணி இதுவரை வெளிநாட்டில் விளையாடிய 8 போட்டிகளிலும் தோல்வியுற்றுள்ளது. மாறாக, மேற்கிந்தியத் தீவுகள் அணி கடைசி 11 போட்டிகளில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Summary

Jayden Seales takes 5 wickets as West Indies beat Pakistan by 90 runs in the 1st cricket Test

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.