சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் விஜய் ஆய்வு! துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? அமித் ஷா எங்கே? பயந்துவிட்டாரா? மக்களவையில் ராகுல் கேள்வி! மாணவர்கள் போராட்டத்தை பாஜகவினர் குழந்தைகளே ஆதரிப்பார்கள்! ராகுல் காந்தி பேச்சு!மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி சாதாரணமான ஒன்றுதான்! மாநிலங்களவையில் ஜெ.பி. நட்டா பதில்!பாமக தலைவராக மீண்டும் அன்புமணி தேர்வு! நீட் வினாத்தாள் கசிவு! விரைவு நீதிமன்றத்தில் அவகாசம் கோரிய சிபிஐ! சென்னை – செய்யாறு இடையே 4 வழிச்சாலை: திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து!தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
/

அதிரடி முன்னேற்றம்... டி20 தரவரிசையை அசைத்துப் பார்த்த வைபவ் சூர்யவன்ஷி!

டி20 தரவரிசையில் இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக முன்னேற்றம் பெற்றுள்ளதைப் பற்றி...

News image

வைபவ் சூர்யவன்ஷி.

Updated On :29 ஜூலை 2026, 2:48 pm IST

டி20 தரவரிசையில் இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக முன்னேற்றம் பெற்றுள்ளார்.

ஐசிசி கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமை வெளியிடப்படுகிறது. அதன்படி, இந்த வாரத்துக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூலை 29) வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இந்திய அணியின் 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக முன்னேற்றம் பெற்றுள்ளார்.

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடம்பெற்றிருந்த வைபவ் சூர்யவன்ஷி, அயர்லாந்து தொடரில் விளையாடவில்லை என்றாலும், இங்கிலாந்து தொடரில் விளையாடி அவர் சரியாக சோபிக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் இடம்பெற்றிருந்த சூர்யவன்ஷி, தனது அதிரடியைத் தொடர்ந்தார். மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு அரைசதங்கள் விளாசிய சூர்யவன்ஷி, 151 ரன்கள் குவித்திருந்தார்.

முதல் போட்டியில் 19 பந்துகளில் 50 ரன்கள் விளாசியிருந்த அவர், இரண்டாவது போட்டியில் 9 பந்துகளில் 20 ரன்களும், மூன்றாவது போட்டியில் 49 பந்துகளில் 81 ரன்களும் எடுத்து சதத்தை நழுவ விட்டிருந்தாலும், தொடர் நாயகன் விருதைக் கைப்பற்றினார்.

Story image

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒரே தொடரில் விளையாடியதன் மூலம் கிடுகிடுவென, 230 இடங்கள் முன்னேறி 536 புள்ளிகளுடன் 48-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியாவின் மற்றொரு ஆட்டக்காரர் இஷான் கிஷன் 910 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். திலக் வர்மா இரண்டு இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். சரியாக சோபிக்காத அபிஷேக் சர்மா 2-வது இடத்திலிருந்து 3-வது இடத்துக்கு சரிந்துள்ளார்.

Summary

ICC rankings for batters in ODI cricket while young batting sensation Vaibhav Sooryavanshi moved up a whopping 230 places to 48th in T20Is after his recent exploits against Zimbabwe.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.