சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமான மிகவும் இளம் வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி மான்செஸ்டரில் இன்று (ஜூலை 4) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடி வருகிறது.
சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி!
ஐபிஎல் தொடரில் அதிரடியில் மிரட்டிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில், அவர் பிளேயில் லெவனில் இடம் பிடித்தார்.
இந்திய அணிக்காக மிகவும் இளம் வயதில் அறிமுகமான வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் தன்வசம் வைத்திருந்தார். அவர் கடந்த 1989 ஆம் ஆண்டு கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக 16 வயதில் அறிமுகமானார். தற்போது, சச்சின் டெண்டுல்கரின் இந்த சாதனையை 15 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமாகி வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷிக்கு முன்பாக இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மிகவும் இளம் வயதில் அறிமுகமான வீரராக சச்சின் டெண்டுல்கரும், டி20 போட்டிகளில் மிகவும் இளம் வயதில் அறிமுகமான வீரராக வாஷிங்டன் சுந்தரும் (18 வயது) சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Vaibhav Suryavanshi has set the record for being the youngest player to make his debut for the Indian team in international cricket.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









