கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டிஉதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!

சென்செக்ஸ் 492.70 புள்ளிகள் சரிந்து 77,235.46 புள்ளிகளாவும், நிஃப்டி 132.75 புள்ளிகள் சரிந்து 24,154.90 புள்ளிகளாக நிலைபெற்றது.

News image

கோப்புப் படம்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 6:15 pm IST

மும்பை: உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் போர் அச்சம் காரணமாக, முதலீட்டாளர்கள் நம்பிக்கையை பெரிதும் பாதித்ததால் உள்ளூரில், பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவடைந்தன. இதில் நிஃப்டி தொடர்ந்து 132 புள்ளிகள் சரிந்து அனைவரையும் அச்சத்தில் அழ்த்தியது.

தொடர்ந்து 3 வது நாளாக ஏற்பட்ட சரிவையடுத்து, 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 492.70 புள்ளிகள் சரிந்து 77,235.46 புள்ளிகளாக இருந்தது. 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி தொடர்ந்து 6 வது நாளாக 132.75 புள்ளிகள் சரிந்து 24,154.90 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் ஏசியன் பெயிண்ட்ஸ், இன்ஃபோசிஸ், எச்.சி.எல் டெக், பார்தி ஏர்டெல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் மறுபுறம் ஆக்சிஸ் வங்கி, பவர் கிரிட், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்தன.

நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.4 சதவீதம் சரிந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடும் மாற்றமின்றி முடிவடைந்தன.

துறை வாரியாக ஆட்டோ, மீடியா மற்றும் எண்ணெய் & எரிவாயு ஆகியவை உயர்ந்த நிலையில், ஐடி குறியீடு 1.9 சதவீதமும், எஃப்எம்சிஜி குறியீடு 0.7 சதவீதமும், ரியல்டி குறியீடு 1.4 சதவீதமும் மற்றும் மெட்டல் குறியீடு 0.6 சதவீதமும் சரிந்தன.

அமெரிக்க-ஈரான் தற்காலிகப் போர் நிறுத்தம் காலாவதியானதைத் தொடர்ந்து, தீர்வுக்கான நம்பிக்கை மங்கியதால் முதலீட்டாளர்களின் அச்சம் அதிகரித்தது. அதே நிலையில், உலகளாவிய பங்குச் சந்தைகள் பலவீனமான போக்கு தொடர்ந்ததாலும், அதிகரித்து வரும் அமெரிக்கப் பத்திர வருவாய், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்டவை பணவீக்கத்தை மீண்டும் ஏற்படுத்திவிடுமோ என்ற கவலை அதிகரித்ததால், முதலீட்டாளர்களின் பதற்றம் அதிகரித்து, பங்குச் சந்தைகள் சரிந்தன.

உயர்ந்து வரும் அமெரிக்கப் பத்திர வருவாயானது, பங்குச் சந்தையின் கவர்ச்சியை மேலும் குறைத்த நிலையில், தொடர்ந்து நிலவும் உயர் வட்டி விகிதங்கள் உலகளாவிய தொழில்நுட்பச் செலவினங்களைக் குறைக்கக்கூடும் என்ற அச்சங்களுக்கு இடையில், தகவல் தொழில்நுட்பப் பங்குகளும் சரிந்தன.

ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஜப்பானின் நிக்கெய் 225 குறியீடுகள் சரிவுடன் நிறைவடைந்தன. அதே வேளையில், ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடும் சற்றே உயர்வுடன் நிறைவடைந்தன.

ஐரோப்பிய சந்தைகள் கலவையான போக்கில் வர்த்தகமாகின நிலையில், நேற்று அமெரிக்க சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன.

பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 2,535.10 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 0.17 சதவீதம் உயர்ந்து 91.02 அமெரிக்க டாலராக உள்ளது.

புதிய பங்குகள் வெளியீடு

இன்று மில்கி மிஸ்ட் பங்குகள், வலுவான அறிமுகத்திற்குப் பிறகு, மும்பை பங்குச் சந்தையில் 29.6% உயர்ந்து ரூ.181.45 ஆக நிறைவடைந்தன. நிஃப்டி-யில் இந்த பங்கு ரூ.165 க்கு பட்டியலிடப்பட்டது. இது அதன் ஐபிஓ விலையான ரூ.140 ஐ விட இது 17.86% பிரீமியத்தைக் கொண்டாதாக அமைந்தது.

Summary

Market benchmark indices ended lower with the Sensex falling 493 points.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.