பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்தேர்தல் ஆணையம் நோக்கி அக். 6 பேரணி! போராட்டங்களை அறிவித்த இந்தியா கூட்டணி!ரூ. 100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது! உயர் நீதிமன்றம்தவெகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!தில்லியில் இந்தியா கூட்டணிக் கூட்டம் தொடங்கியது! 19 கட்சிகள் பங்கேற்பு!துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு!முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

31 ஆண்டுகளில் முதல் முறை... சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்த வங்கதேசம்!

ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி வங்கதேச அணி வரலாறு படைத்துள்ளது.

Bangladesh team players posing enthusiastically after a historic Test victory.

வரலாற்று டெஸ்ட் வெற்றிக்குப் பிறகு உற்சாகமாக போஸ் கொடுக்கும் வங்கதேச அணி வீரர்கள் - படம் | AP

Published On :

ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி வங்கதேச அணி வரலாறு படைத்துள்ளது.

ஆஸ்திரேலியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டார்வினில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 198 ரன்களும், வங்கதேச அணி அதன் முதல் இன்னிங்ஸில் 426 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன. வங்கதேசத்தைக் காட்டிலும் 228 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கு வங்கதேச அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை 14.2 ஓவர்களில் எட்டி வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது.

31 ஆண்டுகளில் முதல் முறை...

கடந்த 31 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி அதன் சொந்த மண்ணில் இந்தியாவைத் தவிர வேறு எந்தவொரு ஆசிய நாட்டிடமும் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததில்லை. சொந்த மண்ணில் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியின் அந்த ஆதிக்கத்தை வங்கதேசம் முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.

அதேபோல, ஆஸ்திரேலிய மண்ணில் மிகவும் குறைந்த போட்டிகளில் வெற்றியைப் பதிவு செய்த ஆசிய அணி என்ற சாதனையையும் வங்கதேசம் படைத்துள்ளது. வெறும் 3 டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணி ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெறுவதற்கு 12 போட்டிகளும், பாகிஸ்தான் அணி 7 போட்டிகளும் எடுத்துக் கொண்டன. ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி இதுவரை ஒரு வெற்றிகூட பெறவில்லை.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த வெற்றி டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணி பெறும் இரண்டாவது மிகப் பெரிய வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Summary

The Bangladesh team has made history by defeating the Australian team on its home soil.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.