சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்விக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், “முதல் நாளிலேயே எங்கள் தோல்வி தொடங்கிவிட்டது” எனக் கூறியுள்ளார்.
டார்வினில் கடந்த ஆக.13ல் தொடங்கிய இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் 198 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வங்கதேசம் 426 ரன்கள் குவித்தது.
இரண்டாம் இன்னிங்ஸில் ஆஸி. 284 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, வங்கதேசம் 57 ரன்கள் எடுத்து வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
சொந்த மண்ணில் முதல்முறையாக வங்கதேசத்திடம் தோல்வியுற்றது குறித்து ஆஸி. அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசியிருப்பதாவது:
அநேகமாக முதல் நாளிலேயே எங்களது தோல்வி தொடங்கிவிட்டது. உங்களுக்குத் தெரியுமா, எங்களது முன் தயாரிப்புகள் நன்றாகவே இருந்தது. சிறப்பாகவே பயிற்சி செய்ததாக நினைத்தேன். அதைக் காரணமாக கூறவில்லை. வங்கதேச அணியினர் சிறப்பாக விளையாடினார்கள்.
முதல்நாளில் ஆடுகளம் எதிர்பார்த்ததைவிட சிறிது முன்பாகவே வேலையைக் காட்டியது. ஆனால், நிச்சயமாக நாங்கள் நிண்ட நேரம் பேட்டிங் செய்ய முயற்சித்தோம். பந்தை ஊடுருவி செல்ல எங்களால் முடியவில்லை. ஆனால், வங்கதேசம் நன்றாக விளையாடினார்கள்.
இப்போதுதான் போட்டி முடிவுற்றுள்ளது. மற்ற விஷயங்களை எல்லாம் ஆராய வேண்டும். நாங்கள் கம்பேக் அளிப்பதில் சிறந்தவர்கள். எங்கு முன்னேற வேண்டுமென நிச்சயமாக சிந்திப்போம் என்றார்.
Summary
Australia captain Pat Cummins share his thoughts on Historic lose against Bangladesh
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெஸ்ட் தொடரை முழுமையாக வெல்வோம்: வங்கதேச கேப்டன்

முதல் இன்னிங்ஸில் 426 ரன்கள் குவித்த வங்கதேசம்..! மீளுமா ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய தன்சித் ஹாசன்!

ஸ்காட் போலண்ட் தேர்வு செய்யப்படாதது ஏன்? பாட் கம்மின்ஸ் விளக்கம்!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்




