/

ஸ்காட் போலண்ட் தேர்வு செய்யப்படாதது ஏன்? பாட் கம்மின்ஸ் விளக்கம்!

முதல் டெஸ்ட்டில் ஸ்காட் போலண்ட் இல்லாதது ஏன் என்பது குறித்து பாட் கம்மின்ஸ் அளித்த விளக்கம் குறித்து...

News image

ஸ்காட் போலண்ட். - படம்: ஏஎன்ஐ

Updated On :12 ஆகஸ்ட் 2026, 4:38 pm IST

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஸ்காட் போலண்ட் இல்லாதது ஏன் என்பது குறித்து பாட் கம்மின்ஸ் விளக்கம் அளித்துள்ளார். அதில், “இது மிகவும் கடினமான முடிவு” எனக் கூறியுள்ளார்.

வங்கதேச அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் நாளை (ஆக. 13) டார்வினில் தொடங்குகிறது.

இந்தப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று காலை அறிவிக்கப்பட்டது. அதில், வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலண்ட் தேர்வாகவில்லை. மாறாக, நாதன் லயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கம்மின்ஸ், ஹேசில்வுட், ஸ்டார்க் ஆகிய மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதால் போலண்டிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது குறித்து கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியிருப்பதாவது:

எங்களுக்கு நாதன் லயன் வேண்டுமென்று உறுதியாக இருந்தோம். அதனால், வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரை இழக்க வேண்டியிருந்தது.

ஹேசில்வுட் இருக்கலாம் என நினைத்தோம். ஆனால், நமக்கு ஸ்காட்டியின் திறமை என்னவென்று தெரியும். இது எப்போதுமே கடினமான முடிவுதான். அவருக்கு அதிகமாக சொல்ல வேண்டியதில்லை; அதிகமான போட்டிகள் இருப்பதால் அவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும். அவருக்கு அவரது மதிப்பு என்னவென்று தெரியும். அதனால், விரைவில் அவர் நிச்சயமாக விளையாடுவார் என்றார்.

Summary

Pat Cummins explains why Scott Boland is dropped from 1st Test vs Bangladesh just months after starring in Ashes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.