வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்! இலங்கை அணி அறிவிப்பு!

இந்தியாவுடனான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு...

sri lanka team

இலங்கை கேப்டன் தனஞ்சய டி சில்வா - x | @OfficialSLC

Published On :

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்புவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியிலும், ஆகஸ்ட் 23-ல் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை சென்றுள்ள இந்திய அணி, கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி இலங்கை லெவன் அணியுடன் பயிற்சி ஆட்டத்திலும் விளையாடி வெற்றி பெற்றது.

இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

இலங்கை அணி விவரம்

தனஞ்சய டி சில்வா (கேப்டன்), லஹிரு உதார, நிஷான் மதுஷ்கா, கமிந்து மெண்டிஸ் (துணை கேப்டன்), தினேஷ் சண்டிமால், பசிந்து சூரியபண்டார, சோனல் தினுஷா, நிரோஷன் டிக்வெல்ல (விக்கெட் கீப்பர்), ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூரிய, கேஷர நுவந்த, மிலன் ரத்நாயக்க, அசித்த பெர்னாண்டோ, லஹிரு குமார, விஷ்வா பெர்னாண்டோ, தில்ஷான் மதுஷங்க

இந்திய அணி விவரம்

ஷுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் (கீப்பர்), துருவ் ஜூரல் (கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதார், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், தேவ்தத் படிக்கல், சரண்ஷ் ஜெயின்

முன்னதாக சாய் சுதர்சன் அணியில் இடம்பெற்றிருந்த நிலையில், காயம் காரணமாக அவர் விலகியதால், சர்ஃபராஸ் கான் சேர்க்கப்பட்டுள்ளார்.

Summary

First Test against India - Sri Lanka squad announced!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.