FOLLOW US

ON GOOGLE DISCOVER

/

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! முதல்முறையாக 33 வயது ஆல்-ரவுண்டருக்கு வாய்ப்பு!

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி பற்றி...

News image

ஷுப்மன் கில் - படம்: பிசிசிஐ

Updated On :28 ஜூலை 2026, 11:06 am IST

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்புவுக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியிலும், ஆகஸ்ட் 23-ல் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் 7 ஆம் தேதி பயிற்சி ஆட்டத்திலும் பங்கேற்கிறது.

இந்த நிலையில், ஷுப்மான் கில் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

அணி விவரம்

ஷுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் (கீப்பர்), சாய் சுதர்சன், துருவ் ஜூரல் (கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதார், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், தேவ்தத் படிக்கல், சரண்ஷ் ஜெயின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த அணியில் யாரும் எதிர்பாராத வகையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயது ஆஃப்-ஸ்பின் ஆல்-ரவுண்டர் சரன்ஷ் ஜெயின் முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் 2014 முதல் விளையாடி வருகிறார் சரன்ஷ் ஜெயின். சமீபத்தில் இலங்கை ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற 2-வது டெஸ் போட்டியில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், 70 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக முதல் டெஸ்ட்டில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆஃப்-ஸ்பின் ஆல்-ரவுண்டரான சரன்ஷ் ஜெயினுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Summary

Indian squad announced for the Test series against Sri Lanka - 33-year-old all-rounder gets a chance for the first time!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.