கேப்டன் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியினர் இலங்கைச் சென்றடைந்துள்ளனர். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி இலங்கையில் டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - இலங்கை இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவிருக்கிறது.
கடைசியாக இந்திய அணி இலங்கையில் 2017ல் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த ஒன்பதாண்டுகளில் பல ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடி இருந்தாலும் டெஸ்ட் தொடரில் விளையாடாமல் இருந்தது.
9 ஆண்டுகள் இடைவெளி ஏன்?
இலங்கை அணி இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் இந்திய மண்ணில் வந்து டெஸ்ட்டில் விளையாடி இருக்கிறது. ஏனெனில், ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சொந்த மண்ணில், வெளி நாட்டில் விளையாட வேண்டும் என்ற விதியினால் இந்தியாவுக்கு 2025-27 சுற்றில்தான் இலங்கையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி தனது எக்ஸ் பக்கத்தில், “இந்திய அணியினர் இலங்கை வந்தடைந்தார்கள். இரு நாடுகளுக்கான டெஸ்ட் தொடரில் விளையாட மேடை தயாராகி விட்டது” எனக் கூறியுள்ளது.
இந்திய அணி: ஷுப்மான் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், சாய் சுதர்சன்*, துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், தேவ்தத் படிக்கல், சரண்ஷ் ஜெயின், ஆகிப் நபி.
Team India have arrived in Sri Lanka ahead of the upcoming Test series! ð®ð³ð¬ð±ð°
— Sri Lanka Cricket ð±ð° (@OfficialSLC) August 4, 2026
The stage is set for an exciting battle between two cricketing nations. ðð¥#SLvIND #TestCricket #SriLankaCricket pic.twitter.com/oOhK4ASzOo
Summary
Team India have arrived in Sri Lanka ahead of the upcoming Test series!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
யார் இந்த சரண்ஷ்? இந்திய டெஸ்ட் அணியில் 33 வயது ஆல்ரவுண்டர்!

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! முதல்முறையாக 33 வயது ஆல்-ரவுண்டருக்கு வாய்ப்பு!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியை அறிவிக்கும் முன்பே சிக்கலில் இந்தியா!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியை அறிவிக்கவுள்ள பிசிசிஐ; பும்ரா இடம்பெறுவாரா?
விடியோக்கள்

திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயில்! | திருக்கோயில் வலம் | Murugan temple




