வரலாற்று வெற்றி குறித்து வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசன் ஷண்டோ, “டெஸ்ட் தொடரை முழுமையாக வெல்வோம்” என பேட்டியில் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய மண்ணில் வங்கதேச அணி தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்து வரலாறு படைத்துள்ளது. மூன்று போட்டிகளிலேயே வங்கதேசம் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆக.13ல் டார்வினில் தொடங்கிய இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 426 ரன்கள் குவிக்க, அடுத்ததாக ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர், 57 ரன்களை சேஸ் செய்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த வரலாற்று வெற்றி குறித்து வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷண்டோ பேசியிருப்பதாவது:
நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் வீரர்களை நினைத்து பெருமையாகவும் உணர்கிறேன். வேகப் பந்துவீச்சாளர்கள் முன்னோக்கி வந்து போட்டியை தனதாக்கிக் கொண்டது மிகப்பெரிய மாற்றம் என நினைக்கிறேன்.
கடந்த சில ஆண்டுகளாக வேகப் பந்துவீச்சாளர்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஊக்குவிக்கப்பட்டதை வரவேற்கிறேன். இளம் வீரர்களை நம்பி இந்த மாற்றத்துக்கு வித்திட்ட ரஹீம், மோமினுல் அவர்களுக்கு நன்றி. டாப் ஆர்டரில் அசத்தும் தன்சிக் அகமதுவினால் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த மிகப்பெரிய தருணத்தில் வங்கதேச கிரிக்கெட் அணி வருங்காலத்தில் எதாவது சிறப்பாக செய்ய எங்களுக்கு ஊக்கமளிக்கும். தொடரை முழுமையாக வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், நாங்கள் அனைத்து துறைகளிலும் தொடர்ச்சியாக நன்றாக விளையாட வேண்டியிருக்கிறது. எங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி எனக் கூறினார்.
Summary
We are confident of a clean sweep Bangladesh Captain Najmul Shanto
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆஸ்திரேலிய மண்ணில் வங்கதேச அணிக்கு முதல் டெஸ்ட் வெற்றி!

தன்சித் ஹாசன், நஜ்முல் ஹொசைன் அசத்தல்: வங்கதேசம் 153 ரன்கள் முன்னிலை!

டெஸ்ட் கிரிக்கெட்டில் தமிம் இக்பால் சாதனையை முறியடித்த மொமினுல் ஹக்!
முஸரபானி, ந்கரவா அசத்தல்! டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய ஜிம்பாப்வே!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்




