தவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

டிபிஎல்: சூப்பர் ஓவருக்கு வித்திட்ட வித்தியாசமான ரன் அவுட்!

தில்லி பிரீமியர் லீக்கில் கவனம் பெற்ற வித்தியாசமான ரன் அவுட் குறித்து...

News image

சூப்பர் ஓவருக்கு வித்திட்ட வித்தியாசமான ரன் அவுட். - படங்கள்: எக்ஸ் / ஃபேன்கோட்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 2:57 pm IST

தில்லி பிரீமியர் லீக்கில் கடைசி பந்தில் 1 ரன் தேவையாக இருக்கும்போது, ஃபீல்டிங்கை தவறவிட்ட கடுப்பில் எட்டி உதைத்த பந்தினால் ரன் அவுட் ஆன சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தில்லி பிரீமியர் லீக்கின் எட்டாவது போட்டியில் நியூ தில்லி டைகர்ஸ் மற்றும் அவுட்டர் தில்லி வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூ தில்லி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இதில் நியூ தில்லி டைகர்ஸ் அணி 156 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக லக்‌ஷய் தரேஜா 62, கேப்டன் ஹிம்மத் சிங் 61 ரன்களும் குவித்தார்கள்.

மழையின் காரணமாக போட்டி 15 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. டிஎல்எஸ் விதியினால் இலக்கு 156ஆக நிர்ணயிக்கப்பட்டது. அடுத்து விளையாடிய அவுட்டர் தில்லி வாரியர்ஸ் அணி 15 ஓவர்களில் 155 ரன்களே எடுத்தது.

கடைசி பந்தில் ஒரு ரன் தேவையாக இருந்த சமயத்தில் பந்தை பிடிக்க தவறிய கேப்டன், கோபத்தில் பந்தை எட்டி உதைக்க, பந்து சரியாக ஸ்டம்பில் பட்டு ரன் அவுட் ஆனது. இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றது.

இந்த நம்பமுடியாத விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பிறகு, சூப்பர் ஓவரில் அவுட்டர் தில்லி வாரியர்ஸ் அணி 20 ரன்கள் குவித்து, 6 ரன்களுக்குள் எதிரணியை 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Summary

DPL 2026 chaos: Himmat Singh's kick in frustration sparks freak run-out to force Super Over

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.