ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

ஜூட் பெல்லிங்கம் இரு கோல்கள்: 8 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து!

கால்பந்து உலகக் கோப்பை காலிறுதியில் வென்ற இங்கிலாந்து அணி குறித்து...

News image

வெற்றிக் களிப்பில் ஜூட் பெல்லிங்கம். - படம்: ஏபி

Updated On :12 ஜூலை 2026, 1:04 pm IST

கால்பந்து உலகக் கோப்பை காலிறுதியில் நார்வே அணியை 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றியைப் பெற்றது.

இந்த வெற்றியின் மூலமாக, 8 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணி உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

அமெரிக்காவின் இன்டர் மியாமி திடலில் காலிறுதிப் போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு நடைபெற்றது. இந்தப் போட்டியில் நார்வேயின் ஆண்ட்ரியாஸ் ஷெல்டெருப் 23ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார்.

முதல் பாதியின் ஸ்டாப்ஜ் நேரத்தில் 45+2ஆவது நிமிஷத்தில் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜூட் பெல்லிங்கம் கோல் அடித்து 1-1 என சமன்படுத்தினார். பின்னர், 55ஆவது நிமிஷத்தில் ஹெர்லிங் ஹாலண்ட் ஃபௌல் செய்ததால், கோல் மறுக்கப்பட்டது.

பின்னர் ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது. அதில், இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜூட் பெல்லிங்கம் 93ஆவது நிமிஷத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து 2-1 என முன்னிலை பெற உதவினார்.

ரியல் மாட்ரிட் கிளப் அணியில் விளையாடும் ஜூட் பெல்லிங்கம் தற்போது இந்த உலகக் கோப்பையில் 6 கோல்கள் அடித்து ஹாரி கேன் உடன் சமன்படுத்தியுள்ளார்.

இந்தப் போட்டியில் நார்வே அணி மொத்தமாக 13 ஷாட்டுகளில் இலக்கை நோக்கி 4 முறை அடித்தது. அதில் ஒரு முறை மட்டுமே கோல் கிடைத்தது. இங்கிலாந்து 14 ஷாட்டுகளில் 7 முறை இலக்கை நோக்கி அடித்ததும் கவனிக்கத்தக்கது.

அரையிறுதியில் இங்கிலாந்தும் ஆர்ஜென்டீனாவும் வரும் ஜூலை 16ஆம் தேதி மோதவிருக்கின்றன.

Summary

Bellingham scores twice to lift England past Haaland and Norway 2-1 and into World Cup semifinals

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.