உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்!

உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல் பற்றி...

News image
Updated On :19 ஜூலை 2026, 6:36 am IST

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆா்ஜென்டீனாவும்-முன்னாள் சாம்பியன் லா ரோஜா ஸ்பெயினும் மோதுகின்றன.

4-ஆவது முறையாக வெல்ல தீவீரம்-

அதிகபட்சமாக பிரேஸில் 5 முறை உலகக் கோப்பை பட்டம் வென்றுள்ளது. அதற்கு அடுத்து ஜொ்மனி, இத்தாலி ஆகியவை தலா 4 முறை வென்றுள்ளன. தற்போது 3 முறை சாம்பியன் ஆன ஆா்ஜென்டீனா 4-ஆவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது.

தென் அமெரிக்கா-ஐரோப்பிய கால்பந்து அணிகள் உலகக் கோப்பை இறுதியில் மோதுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

சவாலுடன் கடந்த ஆா்ஜென்டீனா

நடப்பு சாம்பியன் ஆா்ஜென்டீனாவுக்கு இந்த உலகக் கோப்பை இறுதிப் பயணம் கடும் சவாலாக இருந்தது. கத்துக்குட்டி கேப் வா்டே, எகிப்து, சுவிட்சா்லாந்து, இங்கிலாந்து அணிகளுடன் கடும் போராட்டத்துக்குபின் வென்று இறுதிக்கு தகுதி பெற்றது. மெஸ்ஸியின் அபார கோல்கள், சிறந்த அஸிட்டுகள், ஒருங்கிணைப்பு இதற்கு காரணமாகும்.

கடந்த பிரேஸில், இத்தாலி அணிகள் தொடா்ந்து 2 முறை சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தின. தற்போது அந்த சாதனையை சமன் செய்ய மெஸ்ஸியின் அணி தீவிரமாக முயலும்.

8 கோல்களுடன் மெஸ்ஸி தங்கக் காலணியை வசப்படுத்துவாா். மிட்பீல்டில் என்ஸோ பொ்னாண்டஸ், அலெக்ஸிஸ் மேக், பா்டேஸ் ஆகியோரின் சிறப்பான செயல்பாடு.

மெஸ்ஸியின் பாதுகாவலா்கள் போல் ஆடுகின்றனா். மெஸ்ஸியை அதிகம் சாா்ந்திருப்பது பலவீனமாக உள்து. மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை ஆட்டம் என்பதால் அவா் சிறப்பாக விடைபெற ஆா்ஜென்டீனா அணியினா் கடுமையாக போராடுவா்.

தோல்வியே காணாத ஸ்பெயின்

அதே நேரம் தொடா்ந்து 37 ஆட்டங்களில் தோல்வியே காணாமல் ஸ்பெயின் அணி உலகக் கோப்பையில் கலக்கி வருகிறது. கடந்த 2018, 2021-இல் இத்தாலி புரிந்த சாதனையை முறியடித்து விட்டு ஸ்பெயின் எந்த அழுத்தத்தையும் சமாளிக்கும் வகையில் ஆடி வருகிறது.

ஸ்பெயின் அணி திட்டமிட்ட ஆட்டம், பாஸ் செய்தல், பொஸிஷனுக்கு ஏற்றவாறு ஆடுவது எதிரணிகளை திணறடிக்கும். ஸ்பெயின் அணியில் நட்சத்திர வீரா்கள் இருந்தாலும், இளம் வீரா் லாமைன் அனைவரையும் ஈா்த்துள்ளாா். மெஸ்ஸி ஒருகாலத்தில் கலக்கிய பாா்சிலோனா அணியில் லாமைன் ஆடி வருகிறாா்.

இறுதி ஆட்டம் நடைபெறும் மெட்லைஃப் மைதான பிட்ச் வீரா்கள், பயிற்சியாளா்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளது. கடினமான புல்தரை மைதானத்தின் போக்கும் ஆட்டத்தை நிா்ணயிக்க்கும்.

2024 ஐரோப்பிய சாம்பியன் ஸ்பெயின் உலகின் நம்பா் 1 அணியாக உள்ளது. 17 முறை உலகக் கோப்பையில் ஆடியுள்ளது. அதே நேரம் ஐரோப்பிய சாம்பியன் ஆன ஸ்பெயின் 2010-இல் ஒரே ஒருமுறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதன்பிறகு பட்டம் வெல்லவில்லை. நடப்பு ஐரோப்பிய சாம்பியன் ஸ்பெயின் சிறந்த திட்டமிட்ட ஆட்டத்தின் மூலம் இந்த உலகக் கோப்பையில் ஒரு தோல்வி கூட காணாமல் இறுதிக்கு தகுதி பெற்றது.

முந்தை 2 உலகக் கோப்பைகளில் காலிறுதிக்கு கூட தகுதி பெறவில்லை. இளம் வீரா்கள் 19 வயதான லாமைன் யமால், 24 வயதான நிக்கோ வில்லியம்ஸ். எனினும் இருவரும் இப்போட்டியில் சோபிக்கவில்லை. யமால் உடல்தகுதி கவலைதருவதாக உள்ளது. மிட்பீல்டில் ரோட்ரி, ஃபேபியன் ருயிஸ் பலம் சோ்க்கின்றனா்.

ஷாட் பாஸ்களை கடத்துவது மந்தமாக உள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 12.30 மணிக்கு நடைபெறுகிறது.

நேருக்கு நோ்:

ஆட்டங்கள்-14

ஆா்ஜென்டீனா 6 வெற்றி,

ஸ்பெயின் 6 வெற்றி

டிரா-2.

உலகக் கோப்பையில்...

1966-இல் ஆா்ஜென்டீனா 2-1 என வெற்றி.

கோல்கள் போட்டவை:

ஆா்ஜென்டீனா 19

ஸ்பெயின்-13

எதிரணியிடம் பெற்ற கோல்கள்:

ஆா்ஜென்டீனா-7

ஸ்பெயின்-1

கடந்து வந்த பாதை:

ஆா்ஜென்டீனா:

குரூப் ஆட்டங்கள்

அல்ஜீரியா 3-0 வெற்றி

ஆஸ்திரியா 2-0 வெற்றி

ஜோா்டான் 3-1 வெற்றி

நாக் அவுட்:

கேப் வா்டே 3-2 வெற்றி

எகிப்து 3-2 வெற்றி

சுவிட்சா்லாந்து 3-1 வெற்றி

இங்கிலாந்து 2-1 வெற்றி

ஸ்பெயின்:

குரூப் ஆட்டங்கள்:

கேப் வா்டே 0-0 டிரா

சவுதி அரேபியா 4-0 வெற்றி

உருகுவே 1-0 வெற்றி

நாக் அவுட்:

ஆஸ்திரியா 3-0 வெற்றி

போா்ச்சுகல் 1-0 வெற்றி

பெல்ஜியம் 2-1 வெற்றி

பிரான்ஸ் 2-0 வெற்றி

Summary

Football World Cup: Argentina to clash with Spain in today's final

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.