ஒலிம்பிக்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில், “கம்பேக் என்பது ஆர்ஜென்டீனாவின் டிஎன்ஏவிலேயே இருக்கிறது” எனக் குறிப்பிட்டு 2004 ஒலிம்பிக்ஸ் கூடைப் பந்து போட்டியின் விடியோவை வெளியிட்டுள்ளது.
கால்பந்து உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனா கடைசி 14 நிமிஷங்களில் 2 கோல்களை அடித்து, 2-1 என த்ரில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி 84ஆவது நிமிஷம் வரை 1-0 என முன்னிலை வகித்தது. 85ஆவது நிமிஷத்தில்தான் ஆர்ஜென்டீனா தனது முதல் கோலை அடித்தது. பின்னர், 90+2 நிமிஷத்தில் மற்றுமொரு கோல் அடித்து வென்றது.
இந்த உலகக் கோப்பையில் பல போட்டிகளில் ஆர்ஜென்டீனா இதே மாதிரியான பாணியில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இதனைப் பாராட்டும் விதத்தில் ஒலிம்பிக்ஸின் சமூக வலைதள பக்கத்தில் (எக்ஸ், இன்ஸ்டா) ஒரு விடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அந்த விடியோவில் 2004 ஏதேன்ஸில் நடைபெற்ற கூடைப் பந்து ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா 3.8 நொடிகளில் கம்பேக் அளித்து சாதனை படைத்திருக்கும். இதனைப் பகிர்ந்த ஒலிம்ப்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
உண்மையாக முடியாத வரைக்கும் எப்போதும் முடிந்ததில்லை. நேற்று ஃபிஃபா உலகக் கோப்பை அரையிறுதியில் ஆர்ஜென்டீனா கம்பேக் அளித்தது ஏதேன்ஸ் 2004 நினைவுக்கு வருகிறது.
உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? ஆடவர் கூடைப் பந்து போட்டியில் 3.8 நொடிகளே மீதமிருக்கும் வேளையில் செர்பியா, மாண்டினீக்ரோவுக்கு எதிராக ஆர்ஜென்டீனா நம்பமுடியாத அளவுக்கு கம்பேக் அளித்தது. கம்பேக் என்பது ஆர்ஜென்டீனாவின் டிஎன்ஏவிலேயே இருக்கிறது எனக் கூறியுள்ளது.
It's never over until it's really over. ð®âð¨
— The Olympic Games (@Olympics) July 16, 2026
Yesterday's #FIFAWorldCup semifinal brought back memories from #Athens2004... Do you remember when, with just 3.8 seconds left, Argentina pulled off an unbelievable comeback against Serbia and Montenegro in men's #Basketball? â±ï¸ð¥â¦ pic.twitter.com/QseDEKdxMK
Summary
"Comeback is in Argentina's DNA"... Video released by the Olympics!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரையிறுதியில் ஜெர்ஸியை மாற்றும் ஆர்ஜென்டீனா! பின்னணியில் ஒரு வரலாற்று காரணம்!

கூடுதல் நேரத்தில் 2 கோல்கள்: த்ரில் வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறியது ஆர்ஜென்டீனா!

கூடுதல் நேரத்துக்குச் சென்ற ஆட்டம்: கேப் வெர்டேவை போராடி வென்றது ஆர்ஜென்டீனா!
மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |




