கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் ஸ்பெயின் கால்பந்து அணி அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் காற்றின் தரம் மோசமடைந்ததால், அந்த அணி வேறு இடத்தில் பயிற்சி செய்து வருகிறது.
கால்பந்து உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியும் ஆர்ஜென்டீன அணியும் நியூ ஜெர்ஸியில் வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு மோதவிருக்கின்றன.
ஸ்பெயின் அணியின் பயிற்சியை ஊடகங்கள் பார்வையிட முதல் 15 நிமிஷங்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆர்ஜென்டீனா அட்லாண்டா பகுதியிலேயே பயிற்சியைத் தொடர்ந்து வருகிறது.
கனடாவின் எல்லைக்கு அருகில் இருக்கும் நியூ ஜெர்ஸியில் காற்றில் புகை கலந்துள்ளதால், காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. அட்லாண்டா, மரியேட்டா, ஜியார்ஜியா ஆகிய பகுதிகளில் எந்தப் பாதிப்பும் இல்லையெனக் கூறப்படுகிறது.
நியூ ஜெர்ஸி பகுதியில் வசிப்பவர்கள் வீட்டிற்குள்ளே இருக்கும்படியும் வெளியே சென்றால் முகக் கவசம் அணியும்படியும் அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
காற்று மாசுபாடு இருக்கும்போது வீரர்கள் பயிற்சி செய்வது ஆபத்தானது என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். ஸ்பெயின் அணியின் கால்பந்து கழகம் மூடிய ஏசி நிரப்பப்பட்ட இடம் பயிற்சிக்குத் தேவை என ஃபிஃபாவிடம் கூறியுள்ளது.
காட்டுத்தீயினால் புகை அதிகமாக வட அமெரிக்காவில் பரவி வருகிறது. ஆண்டுக்கு பத்தாயிரம் நபர்கள் இந்த நச்சுக் காற்றினால் உயிரிழப்பதாக ஆயுவுகள் மூலம் தெரியவருகின்றன.
கனடிய காட்டுத்தீ தகவல் அமைப்பு அளித்துள்ள தகவலின் படி தற்போது கனடாவில் 893 இடங்களில் காட்டுத் தீ எரிந்து கொண்டிருக்கின்றன. இதனால் 2,773,872 ஹெக்டர் நிலப்பரப்பு எரிந்துள்ளது.
ð Ontario ,Canada ð¨ð¦
— sustainme.inÂ®ï¸ (@sustainme_in) July 16, 2026
There are roughly 180 to 200 active wildfires burning across Ontario, with approximately 60 to 69 classified as completely OUT OF CONTROL.
The fires have impacted over 600,000 hectares (6,000 km2) of land.
#Canada â¯â¯â¯ #Ontario #Wildfires #Incendio⦠pic.twitter.com/HCDlz7Ou1s
Summary
Spain practices outside before the World Cup final as smoke fills the air in northern New Jersey becase of Canada wildfires
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின்

16 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின்..! பெல்ஜியம் போராடி தோல்வி!

க்ளீன் ஷீட்டில் ஸ்பெயின் உலக சாதனை: 609 நிமிஷங்கள் கோல் அடிக்க விடாமல் தடுத்த கோல்கீப்பர்!

உலகக் கோப்பையில் வரலாறு: 519 நிமிஷங்கள் கோல் அடிக்கவிடாமல் தடுத்த ஸ்பெயின் கோல்கீப்பர்!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



