ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனையை சமன் செய்த மெஸ்ஸி!

பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் ஆர்ஜென்டீனா அணியின் லியோனல் மெஸ்ஸி சாதனையை சமன் செய்துள்ளதைப் பற்றி...

News image

லியோனல் மெஸ்ஸி (இடதுபுறம்) மற்றும் ஜூலியன் அல்வாரெஸ்.

Updated On :17 ஜூன் 2026, 11:36 am IST

பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் ஆர்ஜென்டீனா அணியின் லியோனல் மெஸ்ஸி சாதனையை சமன் செய்துள்ளார்.

ஃபிபா உலகக்கோப்பைத் தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மொத்தமாக 48 அணிகள் பங்கேற்று 12 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள கான்சஸ் சிட்டியில் குரூப் ஜெ பிரிவில் இடம்பெற்றுள்ள நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா மற்றும் அல்ஜீரியா அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் அணியின் கேப்டன் லயனல் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடிக்க, ஆர்ஜென்டீனா அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை அட்டகாசமாகத் தொடங்கியிருக்கிறது.

6-வது உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்றுள்ள 38 வயதான மெஸ்ஸி சர்வதேச அளவில் தனது 200-வது போட்டியில் விளையாடினார்.

6 தொடர்களில் விளையாடி இருந்தாலும் இதுவரை ஹாட்ரிக் கோல் சாதனை படைக்காமலிருந்த மெஸ்ஸிக்கு, நடப்பாண்டு தொடரின் முதல் போட்டியிலேயே அவர் அசத்தியுள்ளார்.

ஹாட்ரிக் மட்டுமின்றி, உலகக்கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்த ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் க்ளோஸின் (16 கோல்கள்) சாதனையையும் மெஸ்ஸி சமன் செய்துள்ளார்.

மேலும், போர்ச்சுக்கல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முந்தைய சாதனையை முறியடித்து, இந்தத் தொடரில் ஹாட்ரிக் கோல்கள் அடித்த மிக வயதான வீரர் என்ற பெருமையையும் மெஸ்ஸி பெற்றார். ஒரு உலகக் கோப்பை போட்டியில் பல கோல்களை அடித்த மிக வயதான வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

Summary

Lionel Messi scored a historic hat trick as Argentina opened their FIFA World Cup title defence with a commanding 3-0 victory over Algeria in Kansas City on Tuesday, drawing level with Miroslav Klose as the tournament's all-time leading goalscorer.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.