பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

உலகக் கோப்பையில் மெஸ்ஸி நிகழ்த்திய 8 சாதனைகள்!

கால்பந்து உலகக் கோப்பையில் மெஸ்ஸி நிகழ்த்திய சாதனைகள் குறித்து...

Argentina's Lionel Messi celebrates after scoring his team's second goal during the World Cup Group J soccer match between Argentina and Algeria in Kansas City, Mo., Tuesday, June 16, 2026. (AP Photo/Charlie Riedel)

கோல் அடித்த மகிழ்ச்சியில் லியோனல் மெஸ்ஸி. - படம்: ஏபி

Published On :

கால்பந்து உலகக் கோப்பையில் லியோனல் மெஸ்ஸி ஒரே போட்டியில் பல சாதனைகள் நிகழ்த்தியுள்ளார்.

ஆர்ஜென்டீனா தனது முதல் போட்டியில் அல்ஜீரியாவை இன்று காலை இந்திய நேரப்படி 6.30 மணிக்கு எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் ஆர்ஜென்டீனா 3-0 என வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஆர்ஜென் டீனாவின் கேப்டனும் நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்ஸி 17, 60, 76ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார். இந்த ஹாட்ரிக் கோல்கள் அடித்ததும் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

1. ஆறாவது உலகக் கோப்பையில் பங்கேற்ற முதல் வீரராக லியோ மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார். முதல்முறையாக ஜெர்மனியில் கடந்த 2006 உலகக் கோப்பையில் அறிமுகமானார்.

2. உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீன அணிக்காக 27 முறை விளையாடியுள்ளார். இதுவரை யாருமே ஒரு தேசிய அணிக்காக இவ்வளவு போட்டிகளில் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3. உலகக் கோப்பையில் அதிக கோல்கள் (16) அடித்த ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் க்ளோஸ் உடன் மெஸ்ஸி சமன்செய்துள்ளார். அடுத்து பல போட்டிகளில் விளையாடவிருக்கும் மெஸ்ஸி விரைவில் அதையும் முறியடிப்பார்.

4. முதல்முறையாக இந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தியுள்ளார். நான்காவது ஆர்ஜென்டீன வீரராகவும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

5. உலகக் கோப்பையில் மிகவும் வயதான வீரர் (38 ஆண்டுகள் 357 நாள்கள்) ஹாட்ரிக் கோல் என்ற சாதனையையும் மெஸ்ஸி நிகழ்த்தியுள்ளார்.

6. உலகக் கோப்பையில் 18 அடி பெனால்டி கட்டத்துக்குப் பின்னால் இருந்து அதிக கோல்கள் (6) அடித்த வீரராக மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டியில் மெஸ்ஸி இரண்டு கோல்களை அடித்ததும் குறிப்பிடத்தக்கது.

7. உலகக் கோப்பையில் 10க்கும் மேற்பட்ட (11) நாடுகளுக்கு எதிராக கோல் அடித்த முதல் வீரராக மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார். முன்னதாக மிரோஸ்லாவ் க்ளோஸ், ரொனால்டோ நஜாரியோ, கிறிஸ்டியானோ ரொனால்டோ தலா 7 நாடுகளுக்கு எதிராக கோல் அடித்துள்ளார்கள்.

8. 200 போட்டிகளில் விளையாடிய முதல் ஆர்ஜென்டீன வீரராக மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார்.

தற்போது மாரடோனாவுடன் 8 அசிஸ்ட்டுகளுடன் சமநிலையில் இருக்கும் மெஸ்ஸி கூடுதலாக ஒரு அசிஸ்ட் செய்தால் அதிலும் புதிய சாதனை படைக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Lionel Messi's 8 Most Jaw-Dropping World Cup Records

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.