காலிறுதிக்கு முந்தைய போட்டியில் வென்ற பிறகு மிகவும் உணர்ச்சிவயப்பட்டு அழுத லியோனல் மெஸ்ஸி அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.
ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் எகிப்துடன் மோதிய ஆர்ஜென்டீனா 3-2 என த்ரில் வெற்றி பெற்றது. கடைசி 15 நிமிஷங்களில் 3 கோல்கள் அடித்து ஆட்டத்தையே மாற்றியது.
இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கோல் அடிக்க தவறிவிடுவார். அப்போது 0-1 என ஆர்ஜென்டீனா பின்னிலையில் இருந்தது. பின்னர், எகிப்து இரண்டாவது கோலையும் அடித்து 2-0 என ஆர்ஜென்டீனாவை முந்தியது.
இந்தப் போட்டியின் 79ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸி அசிஸ்ட் செய்ய ரொமேரோ கோல் அடிப்பார். பின்னர், 83ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸி ஒரு கோல் அடித்து 2-2 என சமன்படுத்தினார்.
பின்னர், 90+2 நிமிஷத்தில் என்ஜோ பெர்னான்டஸ் தலையால் அடித்து ஒரு கோல் அடிப்பார். வெற்றிக்குப் பிறகு அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தனர். மெஸ்ஸி மட்டும் மிகுந்த உணர்ச்சிவயப்பட்டு கண்ணீர் வடித்தார். பின்னர், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆட்ட நாயகன் விருது வென்ற மெஸ்ஸி பேசியதாவது:
பெனால்டியை தவறவிட்டதற்கு மிகவும் வருத்தமடைந்தேன். முக்கியமான நேரத்தில் அணியை கீழிறக்கியதாக உணர்ந்தேன். நல்வாய்ப்பாக இறுதியில் கடவுள் எனக்கு சிறப்பான ஒன்றை சேமித்து வைத்திருந்தார். சமன்படுத்தும் கோலை அடித்தேன். அது மிகப்பெரிய விடுதலையை தந்தது. எங்கள் அணிக்கும் ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது என்றார்.
Summary
Why did he cry after the Round of 16 Egypt match? Messi answers!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலகக் கோப்பை: 5 போட்டிகளில் 4 ஆட்ட நாயகன் விருதுகள் வென்ற மெஸ்ஸி!

பல சாதனைகளுடன் ஆட்ட நாயகன் விருது வென்றார் மெஸ்ஸி!

ஆர்ஜென்டீனாவின் இளம் மெஸ்ஸி..! யார் இந்த நீகோ பஸ்?

கால்பந்து உலகக் கோப்பையில் புதிய உலக சாதனை படைத்த மெஸ்ஸி!
விடியோக்கள்

பள்ளிக்கூடம் செல்ல முதல்வரிடம் பஸ் வசதி கேட்கும் மாணவி | CM Vijay | TVK | School Bus | Sivagangai
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK




