ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

உலகக் கோப்பை: 5 போட்டிகளில் 4 ஆட்ட நாயகன் விருதுகள் வென்ற மெஸ்ஸி!

கால்பந்து உலகக் கோப்பையில் ஆட்ட நாயகன் விருதுகளை வென்று குவிக்கும் லியோனல் மெஸ்ஸி குறித்து...

News image

ஆட்ட நாயகன் விருதுடன் லியோனல் மெஸ்ஸி. - படம்: எக்ஸ் / ஃபிஃபா உலகக் கோப்பை

Updated On :8 ஜூலை 2026, 3:33 pm IST

கால்பந்து உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீன அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி ஆட்ட நாயகன் விருதுகளை வென்று குவித்து வருகிறார்.

நேற்றிரவு ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா கடைசி 15 நிமிஷங்களில் 3 கோல்கள் அடித்து 3-2 என த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி தொடக்கத்தில் பெனால்டியை கோலாக மாற்ற தவறிவிட்டார். பின்னர், இறுதியில் ஒரு கோல், ஒரு அசிஸ்ட் செய்து அசத்தினார். இந்தச் சிறப்பான செயல்பாட்டுக்காக மெஸ்ஸிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இதுவரை இந்த உலகக் கோப்பையில் 8 கோல்கள் அடித்துள்ள மெஸ்ஸி அதிக கோல்கள் அடித்தவராக முதலிடத்தில் இருக்கிறார்.

உலகக் கோப்பையின் வரலாற்றிலும் 21 கோல்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார். 9 அசிஸ்ட்டுகளைச் செய்து அதிலும் முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸி மொத்தமாக 5 ஆட்ட நாயகன் விருதுகள் வென்றிருந்தார். தற்போது, இந்த உலகக் கோப்பையில் காலிறுதிக்குள்ளாகவே 4 முறை ஆட்ட நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார்.

Messi won the 'Man of the Match' award in 4 out of 5 games!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.