ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

எங்களுக்கும் அநாகரிகமாக விளையாடத் தெரியும்: எம்பாபே

பிரான்ஸ் அணியின் கேப்டன் கிளியன் எம்பாபே அளித்த பேட்டி குறித்து...

Kylian Mbappe celebrates France's victory as Paraguay goalkeeper Orlando Gill holds the ball after the final whistle of a World Cup round of 16 soccer match in Philadelphia, Saturday, July 4, 2026. (AP Photo/Matt Slocum)

வெற்றிக்குப் பிறகு பராகுவே கோல்கீப்பரைப் பார்த்து கிண்டலாக கத்தும் எம்பாபே. - படம்: ஏபி

Published On :5 ஜூலை 2026, 4:07 pm IST

பிரான்ஸ் அணியின் கேப்டன் கிளியன் எம்பாபே போட்டிக்குப் பிறகு, “அவர்கள் அநாகரிகமான கால்பந்தை விளையாடினால், நாங்களும் அநாகரிகமாக விளையாடுவோம்” எனக் கூறினார்.

அமெரிக்காவின் பிலடெல்ஃபியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பராகுவே அணியை 1-0 என வீழ்த்திய பிரான்ஸ் காலிறுதிக்கு இரண்டாவது அணியாகத் தேர்வு பெற்றது.

இந்தப் போட்டியில் 34ஆவது நிமிஷத்தில் எம்பாபேவை எதிரணியினர் பந்தைத் தன்வசப்படுத்தும் முயற்சியில் கீழே தள்ளியதும் மோதல் வெடித்தது. இரு அணி வீரர்களும் சூழ்ந்துகொண்டனர்.

நடுவர் எம்பாபேவை தனியாக அழைத்து வந்தார். அதற்குள்ளாக இரு அணி வீரர்களும் மோதிக்கொண்டனர். பின்னர். போட்டியில் பலரும் வேண்டுமென்றே இடித்துக்கொண்டே இருந்தனர்.

பெனால்டியில் கோல் அடித்து வெற்றிக்கு வித்திட்ட எம்பாபே போட்டிக்குப் பிறகு பேசியிருப்பதாவது:

எந்த மாதிரியான போட்டியில் விளையாடுவோம் என்பது எங்களுக்கு முன்னமே தெரியும். நாங்கள் வெறுமனே சாதரணமாக கால்பந்து விளையாடும் அணியல்ல எங்களுக்கும் தாக்குதல் மூலம் அநாகரிகமாகவும் விளையாடத் தெரியும் என்பதை காட்டியிருக்கிறோம்.

நாங்கள் டக்ஸிடோ உடையணிந்து வந்து மேம்பட்ட கால்பந்து விளையாடுவோம் என அவர்கள் நினைத்து வந்திருக்கிறார்கள். இதுதான் அவர்களது விளையாட்டு முறை. நீங்கள் எங்களை மோசமான யுக்தியை கையாள வைக்க முயற்சித்தால் நாங்கள் அதையும் செய்வோம் என்றார்.

Summary

Kylian Mbappe on Paraguay: ‘They thought we’d come playing wearing tuxedos’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.