ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தங்கக் காலணி விருதுக்கான போட்டியில் மெஸ்ஸியை சமன்செய்த எம்பாபே!

உலகக் கோப்பையில் தங்கக் காலணிக்கான போட்டியில் நீடிக்கும் பிரான்ஸ் வீரர் கிளியன் எம்பாபே குறித்து...

France's Kylian Mbappe (10) celebrates after scoring a goal during the World Cup round of 16 soccer match between Paraguay and France in Philadelphia, Saturday, July 4, 2026. (AP Photo/Matt Rourke)

கோல் அடித்த மகிழ்ச்சியில் எம்பாபே. - படம்: ஏபி

Published On :5 ஜூலை 2026, 11:49 am IST

கால்பந்து உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடிப்பவர்களுக்கு வழங்கப்படும் தங்கக் காலணி (கோல்டன் பூட்) விருதுக்கான போட்டியில், பிரான்ஸ் வீரர் கிளியன் எம்பாபே தன்னை நிலைநிறுத்திக்கொண்டே இருக்கிறார்.

தங்கக் காலணிக்கான போட்டியில் ஆர்ஜென்டீன வீரர் லியோனல் மெஸ்ஸி உடன் 7 கோல்கள் அடித்து எம்பாபேவும் சமன்செய்துள்ளார்.

ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பராகுவே அணியுடனான போட்டியில் பெனால்டி வாய்ப்பில் 70ஆவது நிமிஷத்தில் கிளியன் எம்பாபே கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் மெஸ்ஸியுடன் சமன்செய்துள்ளார்.

உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் மெஸ்ஸி 20 கோல்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். எம்பாபே 19 கோல்களுடன் இரண்டாமிடத்தில் தொடர்கிறார்.

இதுவரை, உலகக் கோப்பையில் 19 முறை பங்கேற்றுள்ள எம்பாபே 19 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். கடந்த உலகக் கோப்பையில் 8 கோல்கள் அடித்த எம்பாபே தங்கக் காலணி விருது வென்றதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் டிடியர் தேஷாம்ஸ் கூறியிருப்பதாவது:

எம்பாபேவிடம் கோல் அடிப்பதற்கான ஆர்வம் இருக்கிறது என்பதை முதல் நாளிலிருந்து கூறிவருகிறேன். தடகள வீரருக்கான அனைத்து முயற்சிகளையும் அவர் செய்கிறார். களத்தில் தலைசிறந்த வீரராக இருக்கும் அவர் பேசும்போது அணியில் இருக்கும் அனைவருக்காகப் பேசுகிறார் என்றார்.

Summary

Kylian Mbappe of France scores 19th career World Cup goal, 1 behind Golden Boot rival Messi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.