ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பராகுவே - பிரான்ஸ் ஆட்டத்தில் வீரர்கள் மோதல்: பெனால்டியில் கோல் அடித்த எம்பாபே!

உலகக் கோப்பையின் காலிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ் அணி குறித்து...

France's Kylian Mbappe (10) reacts after the World Cup round of 16 soccer match between Paraguay and France in Philadelphia, Saturday, July 4, 2026. (AP Photo/Matt Rourke)

நடுவர் யெல்லோ கார்டு காட்டும் காட்சி, வெற்றிக் களிப்பில் எம்பாபே. - படங்கள்: ஏபி

Published On :5 ஜூலை 2026, 10:50 am IST

பராகுவே - பிரான்ஸ் மோதிய ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் இரு அணியின் வீரர்கள் மோதிகொண்டதால் ஆட்டம் பரப்பரப்பாகச் சென்றது. போட்டிக்குப் பிறகு பராகுவே அணிக்கு ஒரு யெல்லோ கார்டு வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் பிலடெல்ஃபியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பராகுவே அணியை 1-0 என வீழ்த்திய பிரான்ஸ் காலிறுதிக்கு இரண்டாவது அணியாகத் தேர்வு பெற்றது.

இந்தப் போட்டியில் 34ஆவது நிமிஷத்தில் எம்பாபேவை எதிரணியினர் பந்தைத் தன்வசப்படுத்தும் முயற்சியில் கீழே தள்ளியதும் மோதல் வெடித்தது. இரு அணி வீரர்களும் சூழ்ந்துகொண்டனர்.

நடுவர் எம்பாபேவை தனியாக அழைத்து வந்தார். அதற்குள்ளாக இரு அணி வீரர்களும் மோதிக்கொண்டனர். பின்னர். போட்டியில் பலரும் வேண்டுமென்றே இடித்துக்கொண்டே இருந்தனர்.

இரண்டாம் பாதியின் 70ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டியில் கிளியன் எம்பாபே கோல் அடித்து அசத்தினார். பிரான்ஸ் அடித்த 15 ஷாட்டுகளில் இலக்கை நோக்கி 5 முறை மட்டுமே அடிக்கப்பட்டது.

பராகுவே அணியினர் இலக்கை நோக்கி ஒருமுறைக்கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் இவர்கள் பந்தை 22 சதவிகிதம் மட்டுமே தன்வசம் வைத்திருந்தது மிகப்பெரிய காரணமாக அமைந்தது.

இந்தப் போட்டியில் பராகுவே 13 ஃபௌல்களைச் செய்ய, பிரான்ஸ் 11 செய்தனர். பிரான்ஸ் அணிக்கு 3 யெல்லோ கார்டுகள் வழங்கப்பட்டன. காலிறுதியில் பிரான்ஸ் - மொராக்கோவை எதிர்கொள்கிறது.

Summary

Kylian Mbappe scores again, France reaches World Cup quarterfinals with 1-0 win over Paraguay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.