2026 ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே 3 ரெட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
கோலகலமாகத் தொடங்கிய உலகக் கோப்பையின் முதல் போட்டியில் தனது சொந்த மண்ணில் விளையாடிய மெக்சிகோ அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது.
தொடக்க ஆட்டத்தில் மெக்சிகோ அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மெக்சிகோ சார்பில் ஜூலியன் குவினோன்ஸ் மற்றும் ரவுல் ஜிமெனெஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
ஆட்டத்தின் இறுதிவரை ஒரு கோல்கூட அடிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி திணறியது. இதனால் முதல் போட்டியிலேயே தன்னுடைய வெற்றியைப் பதிவு செய்தது மெக்சிகோ அணி.
இந்த நிலையில், உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறையாக தொடக்க ஆட்டத்திலேயே மூன்று ரெட் கார்டுகள் வழங்கபட்டன. விதிகளை மீறியதற்காக தென் ஆப்பிரிக்கா அணியைச் சேர்ந்த ஸ்பெபெலோ சிதோல் மற்றும் தெம்பா ஸ்வானே ஆகியோருக்கு நடுவர் ரெட் கார்டு காட்டினார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 9 வீரர்களுடன் மட்டுமே விளையாடியது.
மேலும், ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் மெக்சிகோ வீரர் சீசர் மான்டெஸும் ரெட் கார்டு பெற்று வெளியேற்றப்பட்டார். ஆகையால், ரெட் கார்டு பெற்றவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.
முன்னதாக 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பை போட்டியுல் மொத்தமாகவே தலா நான்கு ரெட் கார்டுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Three red cards were issued in the very first match of the 2026 Football World Cup.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இரண்டாம் பாதியில் கம்பேக் அளித்த தென் கொரியா த்ரில் வெற்றி!

96 ஆண்டுகால சாபத்தை முறியடித்து வரலாறு படைத்தது மெக்சிகோ!
உலகக் கோப்பையின் முதல் போட்டி: வெற்றியுடன் தொடங்கியது மெக்சிகோ!

உலகக் கோப்பையின் அதிபதி: கிரிக்கெட்டை விட 87 மடங்கு அதிக பரிசுத் தொகையுடன் களமிறங்கும் ஃபிஃபா!
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



