தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

ரெட் கார்டில் மோசடி செய்தும் தோல்வியுற்ற அமெரிக்கா..! கிண்டல் செய்த பெல்ஜியம்!

உலகக் கோப்பையில் அமெரிக்காவை வீழ்த்திய பெல்ஜியம் அணியின் கிண்டலான பதிவு குறித்து...

News image

வெற்றிக் களிப்பில் பெல்ஜியம் அணி வீரர்கள். - படம்: எக்ஸ் / பெல்ஜியன் ரெட் டெவில்ஸ்.

Updated On :7 ஜூலை 2026, 6:51 pm IST

கால்பந்து உலகக் கோப்பையில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அமெரிக்காவை வீழ்த்திய பெல்ஜியம் அணி தனது எக்ஸ் பக்கத்தில் ரெட் கார்டு சர்ச்சை குறித்து கிண்டலாக பதிவிட்டுள்ளது.

ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அமெரிக்காவை பெல்ஜியம் அணி 4-1 என்ற கோல்கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ரெட் கார்டு வழங்கப்பட்ட பலோகன் விளையாடியது சர்ச்சையை கிளப்பியது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீட்டால் பலோகனுக்கு வழங்கப்பட்ட ரெட் கார்டு நீக்கப்பட்டதாக சர்ச்சையானது. இது குறித்து ஃபிஃபாவின் தலைவர் இன்பான்டினோ, “ஃபிஃபா நடுவர் குழு தன்னிச்சையானது. இதில் தலையீடு இல்லை” எனக் கூறினார்.

உலகக் கோப்பையில் ரெட் கார்டு வழங்கப்பட்ட ஒருவர் எப்படி விளையாட முடியுமென பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். இந்த நிலையில், நடைபெற்ற ஆட்டத்தில் பெல்ஜியம் அபாரமான வெற்றியைப் பெற்றது.

ரெட் டெவில்ஸ் எனப்படும் பெல்ஜியம் அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெற்றிக்குப் பிறகு, “இந்த முடிவையும் மாற்றுங்கள்” எனக் கூறி கிண்டலாக பதிவிட்டுள்ளது. இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரெட் கார்டு நீக்கப்பட்ட அமெரிக்க வீரர் பலோகன் இந்தப் போட்டியில் மிகவும் சுமாராகவே விளையாடியது குறிப்பிடத்தக்கது. கால்பந்து ரசிகர்கள் நீதி, நியாயம் வென்றதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

Summary

Belgium Red Devils twitter post after beat USA in red card issue Overturn this

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.