/

நியூசிலாந்தை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது பெல்ஜியம்!

நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய பெல்ஜியம் அணி குறித்து...

News image

கோல் அடித்த மகிழ்ச்சியில் பெல்ஜியம் வீரர்கள். - படம்: ஏபி

Updated On :27 ஜூன் 2026, 4:17 pm IST

கால்பந்து உலகக் கோப்பையில் நியூசிலாந்தை 5-1 என வீழ்த்தி பெல்ஜியம் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது.

குரூப் ஜி பிரிவில் 5 புள்ளிகளைப் பெற்ற பெஜியம் அந்த குரூப்பில் முதலிடத்தையும் பிடித்து அசத்தியுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பெல்ஜியம் அணியினர் 28, 50, 66, 86, 90+4ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தார்கள். நியூசிலாந்து சார்பில் ஆறுதல் அளிக்கும் வகையில் 84ஆவது நிமிஷத்தில் எலீஜா ஜஸ்ட் கோல் அடித்தார்.

இந்தப் போட்டியில், 35 முறை ஷாட்டுகளை அடித்த பெல்ஜியம் 10 முறை இலக்கை நோக்கி அடித்தார்கள். இதில், 5 கோல்கள் தடுக்கப்பட்டன.

பெல்ஜியம் அணியின் நட்சத்திர வீரர் கெவின் டி பிரைன் இந்தப் போட்டியில் கோல் அடித்தார். கடந்த உலகக் கோப்பையில் பெல்ஜியம் குரூப் ஸ்டேஜ் உடன் வெளியேறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணி 2 போட்டிகளில் டிரா ஒரு தோல்வியுடன் உலகக் கோப்பையில் இருந்து வெற்றியே பெறாமல் வெளியேறியது.

Summary

Trossard, De Bruyne score and Belgium defeat New Zealand 5-1 to advance at the World Cup

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.