பழனி செல்லும் பக்தர்களுக்கு ஜாக்பாட்! பல சேவைகளுக்கு முன்பதிவு வசதி தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு (ஜூலை 6, 2026) ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்! மும்பையில் கனமழை: 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி!நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றம்: திமுக கண்டனம்5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

கனமழை எச்சரிக்கை... புணேயில் இன்று(ஜூலை 6) பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழைக்கான வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையைத் தொடர்ந்து புணேயில் இன்று (ஜூலை 6) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

News image

கனமழை எச்சரிக்கை... புணேயில் பள்ளிகளுக்கு விடுமுறை - கோப்புப்படம்

Updated On :6 ஜூலை 2026, 9:49 am IST

புணே: புணேயில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளதை அடுத்து, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புணே மாவட்ட நிர்வாகம் திங்கள்கிழமை(ஜூலை 6) மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், மகாராஷ்டிரம் மாநிலம் மும்பையில் தொடா் பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில், விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையைத் தொடர்ந்து புணேயில் இன்று (ஜூலை 6) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புணே மாநகராட்சி 'எக்ஸ்' தளத்தின் பதிவில், அவசியமான காரணங்களைத் தவிர மக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும், வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், ஆறுகள், ஓடைகள் மற்றும் பிற ஆபத்தான இடங்களுக்கு செல்லாமலும், உள்ளூர் நிர்வாகம் அவ்வப்போது வெளியிடும் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கிடையே, பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள அனைத்து அரசு, தனியார் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை(ஜூலை 6) விடுமுறை அறிவித்து பிரஹன்மும்பை மாநகராட்சி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.

வானிலை முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

பிரஹன்மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த முன்னறிவிப்பு மற்றும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மும்பையில் உள்ள அனைத்து அரசு, தனியார் மற்றும் பிரஹன்மும்பை மாநகராட்சி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை(ஜூலை 6) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று தெளிவுபடுத்தியது.

தாணே மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகிருஷ்ணநாத் பஞ்சால், மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிகள், பால்வாடிகள், தொடக்கப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் திங்கள்கிழமை விடுமுறை அறிவித்தார்.

தொடர் மழையின் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நவி மும்பை மாநகராட்சியும் திங்கள்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது.

மேலும், அவசியமான காரணங்களைத் தவிர மக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும், வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறு நவி மும்பை மேயர் சுஜாதா பாட்டீல் மற்றும் ஆணையர் கைலாஸ் ஷிண்டே ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.

Summary

Following a 'Red Alert' issued by the India Meteorological Department (IMD) warning of extremely heavy rainfall, the district administration here declared a holiday for all schools ....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.