கேரளம் மற்றும் மாஹேவில் வியாழக்கிழமை கனமழைக்கான 'ஆரஞ்சு எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கேரளம் மற்றும் மாஹே பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாஹேவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மாஹே உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மற்றும் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயம், கர்நாடகம், கொங்கண் மற்றும் கோவா, லட்சத்தீவுகள், இமயமலை அடிவார மேற்கு வங்கம், சிக்கிம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் உத்தரகண்ட் ஆகிய பகுதிகளில் உள்ள இடங்களிலும் வியாழக்கிழமை (ஜூன் 4) மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், லடாக், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய பகுதிகளின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும்.
தில்லி, ஹரியாணா, சண்டீகர், பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் விதர்பா ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது; அதேவேளையில், மேற்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் புழுதிப் புயல் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இன்றும் வெப்பம் மற்றும் ஈரப்பதம் மிகுந்த வானிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களும் பொதுமக்களும் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Summary
The India Meteorological Department has issued an orange alert for heavy rainfall in Keralam and Mahe today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










