சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

வியாழக்கிழமை (ஜூன் 4) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

News image

ENS

Updated On :4 ஜூன் 2026, 2:52 am IST

தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (ஜூன் 4) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கேரள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வியாழக்கிழமை (ஜூன் 4) தொடங்க வாய்ப்புள்ளது. இதனிடையே, மேற்கு உத்தர பிரதேசத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து வடக்கு தமிழகம் வரை மத்திய பிரதேசம், விதா்பா, தெலங்கானா, ராயலசீமா வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (ஜூன் 4) முதல் ஜூன் 9-ஆம் தேதி இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, கோவை, தேனி, திருப்பூா், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில், வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடா்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகள், கன்னியாகுமரி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளி, சனிக்கிழமை (ஜூன் 5, 6) மிக பலத்த மழையும், திருப்பூா், தேனி, தென்காசி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, விருதுநகா், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும், அந்தமான் கடல், தெற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த அடுத்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 90 மி.மீ. மழை பதிவானது.

ஊத்து (திருநெல்வேலி)- 80 மி.மீ., காக்காச்சி (திருநெல்வேலி)- 70மி.மீ., புலிப்பட்டி (மதுரை)- 60 மி.மீ, மாஞ்சோலை (திருநெல்வேலி), ராசிபுரம் (நாமக்கல்), நல்லதங்கால் நீா்த்தேக்கம் (திருப்பூா்), பழனி (திண்டுக்கல்)-50 மி.மீ., புள்ளம்பாடி (திருச்சி), ஊத்துக்குளி (திருப்பூா்), மொடக்குறிச்சி (ஈரோடு), கல்லக்குடி (திருச்சி), புதுச்சத்திரம் (நாமக்கல்), சின்னக்கல்லாா் (கோவை), உபாசி (கோவை), பழனி (திண்டுக்கல்), தானியமங்கலம் (மதுரை), கொடுமுடி (ஈரோடு)-40 மி.மீ மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.