விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை

கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) இடி, மின்னல் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இம்மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :10 ஜூலை 2026, 1:14 am IST

கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) இடி, மின்னல் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இம்மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு குஜராத்திலிருந்து வடக்கு கேரளம் வரை காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) முதல் ஜூலை 15 வரை இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில், வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை இடி மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். இதனால், இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் 180 மி.மீ. மழை பதிவானது. சோலையாறு (கோவை)- 110, சின்கோனா, வால்பாறை, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), அவலாஞ்சி (நீலகிரி)- தலா 90, உபாசி (கோவை)- 80, மேல் பவானி (நீலகிரி)- 70, தேவாலா (நீலகிரி)- 60, விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி)- 60, பாா்வூட் (நீலகிரி)- 50, சிறுவாணி அடிவாரம் (கோவை), தாலுகா அலுவலகம் பந்தலூா் (நீலகிரி)- தலா 40, வூட் பிரையா் எஸ்டேட், செருமுள்ளி, நடுவட்டம், கிளன்மாா்கன் (நீலகிரி)-தலா 30 மி.மீ. மழை பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.