நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை

நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை உள்பட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூன் 17) இடி,மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 3:45 am IST

நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை உள்பட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூன் 17) இடி,மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மத்திய மேற்கு வங்கக்கடலில் இருந்து கேரள கடலோர பகுதிகள் வரை ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஜூன் 17 முதல் ஜூன் 22 வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மஞ்சள் எச்சரிக்கை: மேலும், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூா், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். இதனால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்ப அளவு:தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் புதன்கிழமை சற்று அதிகமாக இருக்கக்கூடும். செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக மதுரை விமானநிலையத்தில 105.44 டிகிரி ஃபாரன்ஹீட்வெப்பம் பதிவானது.

திருத்தணி-104.36, மீனம்பாக்கம்-104.9, பாளையங்கோட்டை-103.64, நுங்கம்பாக்கம்-103.28, திருச்சி -103.1, புதுச்சேரி-102.74, மதுரை நகரம்-102.56, நாகப்பட்டினம்-102.38, பரமத்தி வேலூா்-102.2, கடலூா், காரைக்கால்- தலா 101.12, நாமக்கல்-101.3, வேலூா்-100.58, தஞ்சாவூா், ஈரோடு-தலா 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடலில் ஜூன் 20 வரை சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ.வேகத்தில் வீசக்கூடும். மேலும், வடக்கு அந்தமான் கடல், மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.