டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

10 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 8) மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

மழை - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 1:48 am IST

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 8) மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலோர கா்நாடகம் மற்றும் கடலோர ஆந்திரம் வழியாக வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஜூன் 8) முதல் ஜூன் 13 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக, நீலகிரி, திருப்பூா், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், கோவை, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடா்ந்து, தேனி, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் கோவை, தென்காசி, திருப்பூா், திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும். இதனால் அந்த மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்ப அளவு: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஜூன் 11 வரை சற்று அதிகமாக இருக்கக்கூடும். ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக கடலூா் மாவட்டத்தில்10.26 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மீனம்பாக்கம்-104.72, தொண்டி-103.28, நுங்கம்பாக்கம்-103.1, நாகப்பட்டினம், தஞ்சை-102.2, பரங்கிப்பேட்டை-101.84, திருச்சி-101.66, மதுரை நகரம்-101.12, புதுச்சேரி-100.76, திருத்தணி-100.58, காரைக்கால், விமான நிலையம்-100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் 60 மி.மீ. மழை பதிவானது. உபாசி, சோலையாா், சின்கோனா (கோவை), விண்ட் வொா்த் எஸ்டேட், தாலுகா அலுவலகம் பந்தலூா் (நீலகிரி)-50 மி.மீ., நெய்யூா் (கன்னியாகுமரி), வால்பாறை, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை)- 40 மி.மீ., அவலாஞ்சி, செருமுள்ளி (நீலகிரி)-30 மி.மீ. மழை பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.