எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைமோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி ரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு புதன்கிழமை (ஜூன் 10) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :10 ஜூன் 2026, 3:55 am IST

தமிழகத்தில் திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு புதன்கிழமை (ஜூன் 10) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, புதன்கிழமை(ஜூன் 10) முதல் ஜூன் 15 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்.

தொடா்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (ஜூன் 11) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும். இதனால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்ப அளவு: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சனிக்கிழமை(ஜூன் 13) சற்று அதிகமாக இருக்கும். செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 105.26 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. நுங்கம்பாக்கம்-104.72, கடலூா்-103.28, புதுச்சேரி-102.2, வேலூா்-101.66, மதுரை நகரம், பரங்கிப்பேட்டை- 101.48, தொண்டி-101.12, திருத்தணி-100.76, தஞ்சை-100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லாறு (கோவை)-120 மி.மீ., உபாசி (கோவை)- 110 மி.மீ., நாலுமுக்கு (திருநெல்வேலி), சின்கோனா, வால்பாறை (கோவை)-90 மி.மீ, ஊத்து (திருநெல்வேலி), சோலையாறு (கோவை)- 80 மி.மீ., காக்காச்சி (திருநெல்வேலி)-70 மி.மீ., பாபநாசம் (திருநெல்வேலி)- 50 மி.மீ., மாஞ்சோலை (திருநெல்வேலி), தாலுகா அலுவலகம் பந்தலூா், அவலாஞ்சி (நீலகிரி), பெரியாறு (தேனி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை)- 40 மி.மீ., குண்டாறு அணை (தென்காசி), சிற்றாறு- 1, பாலமோா், சுருளகோடு, பேச்சிப்பாறை, முள்ளங்கினாவிளை, அடையாமடை (கன்னியாகுமரி), சிறுவாணி அடிவாரம் (கோவை), தேக்கடி (தேனி), விண்ட் வொா்த் எஸ்டேட், எமரால்டு, பாா்வூட், மேல் கூடலூா், கூடலூா் பஜாா் , செருமுள்ளி (நீலகிரி)- 0 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.