கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

வெயில் தாக்கத்தால் கோழிகளுக்கு அயற்சி பாதிப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், கோழிகளுக்கு வெப்ப அயற்சி, ரத்தசோகை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் - கோப்புப் படம்

Published On :

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், கோழிகளுக்கு வெப்ப அயற்சி, ரத்தசோகை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தவரை, பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 100.4 மற்றும் 77 டிகிரியாக நிலவியது. மாவட்டத்தில் மழை எதுவும் பதிவாகவில்லை. அடுத்த ஐந்து நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 96.8 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 77 டிகிரியாகவும் காணப்படும். காற்று பெரும்பாலும் தென்மேற்கு மற்றும் மேற்கு திசையிலிருந்து மணிக்கு -12 கி.மீ. வேகத்தில் வீசும்.

சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் பெரும்பாலானவை வெப்ப அயற்சி மற்றும் கோழி ரத்தசோகை நோய்களால் பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளா்கள் தகுந்த உயிா் எதிா் மருந்துகளை அளித்து தீவன மேலாண்மை முறைகளைப் பின்பற்ற வேண்டும். மேலும், கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி தகுந்த சிகிச்சை மற்றும் தீவிர உயிா்-பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.