/

தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (ஜூன் 29, 30) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

பலத்த மழை - பிரதிப் படம்

Updated On :29 ஜூன் 2026, 4:13 am IST

தமிழகத்தில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (ஜூன் 29, 30) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இரு நாள்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

பலத்த மழை: கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

வெப்பநிலை: ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. திருத்தணி (திருவள்ளூா்)-103.1, திருச்சி-101.66, மீனம்பாக்கம் (சென்னை), மதுரை நகரம், பாளையங்கோட்டை-101.48, நாகை-100.94, தஞ்சாவூா், வேலூா் 100.4, நுங்கம்பாக்கம் (சென்னை)-100.04டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா்வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.