வங்கக்கடலின் வடக்குப் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஜூலை 14 முதல் 20 ஆம் தேதி வரை மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வட வானிலை நிலவக்கூடும். அவ்வப்போது ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஜூலை 16 முதல் ஜூலை 19 வரை மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
இந்த நிலையில், ஒடிசா - மேற்கு வங்கம் இடையே வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது அடுத்த இரண்டு நாள்களில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பலவீனமான தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்த 7 நாள்களுக்கு இந்தியாவின் கிழக்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில், குறிப்பாக ஒடிசா, மேற்கு வங்கம், கங்கை சமவெளிப் பகுதிகள் மற்றும் மத்திய இந்திய மாநிலங்கள் முழுவதும் பரவலான மழைப்பொழிவுக்கு உகந்த சூழலை உருவாக்கும். இதனால் பருவமழையின் தற்போதைய மந்தமான நிலை விலகி, பரவலான கனமழைக்கு வழிவகுக்கும்.
மேலும், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு இந்தியாவின் சில பகுதிகளுக்கும் மழைப்பொழிவை தரும், இது, சமீபத்திய மழைப்பொழிவுப் பற்றாக்குறையைக் குறைக்க உதவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கிட்டத்தட்ட ஒரு வாரமாக இயல்பை விடக் குறைவான மழைப்பொழிவுக்குப் பிறகு, இந்த புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி பருவமழையின் மீள்வருகையின் தொடக்கமாக அமையக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றாலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் மழைக்கு வழிவகுக்கும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Summary
INSAT-3DR satellite on Wednesday morning captured a massive cloud mass over the northwestern Bay of Bengal...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










