ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இதயம் முரளி திரைப்படத்தை வெளியிடும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்!

நடிகர் அதர்வா நடித்துள்ள இதயம் முரளி திரைப்படத்தின் விநியோகஸ்தம் குறித்து...

Posters of the movie Idhayam Murali.

இதயம் முரளி படத்தின் போஸ்டர்கள். - படங்கள்: எக்ஸ் / டான் பிக்சர்ஸ்.

Published On :3 ஜூலை 2026, 3:40 pm IST

நடிகர் அதர்வா நடித்துள்ள இதயம் முரளி திரைப்படத்தின் தமிழ்நாட்டு விநியோகஸ்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இந்தப் படத்தைத் தயாரித்து இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

இந்தப் படத்தில் நடிகர் அதர்வா நாயகனாக நடித்துள்ளார். இவருடன் ஃபகத் ஃபாசில், பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர், ரக்‌ஷன், டிராவிட் செல்வம், நிஹாரிகா, ஏஞ்சலீன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளார்கள்.

இசையமைப்பாளர் தமன் இசையமைத்த இப்படத்தின் நான்கு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகியிருந்த நிலையில், ’கட்டழகி’ என்கிற பாடல் சமீபத்தில் (ஜூலை 1) வெளியானது.

இந்தப் படத்தை இன்பன் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறதென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இந்த நிறுவனம் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி 2 திரைப்படத்தை இன்று (ஜூலை 2) வெளியிட்டுள்ளது.

Summary

TN release of Idhayam Murali is Red Giant Movies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.