குஜராத்தின் 13 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், குஜராத்திலும் கடந்த சில நாள்களாகக் கனமழை பெய்து வருகின்றது. இதையடுத்து, குஜராத்தில் அடுத்த 24 மணிநேரத்துக்கு அதிக கனமழைக்கான “ரெட் அலர்ட்” எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கான “ஆரஞ்ச் அலர்ட்” எச்சரிக்கையும் இன்று (ஜூலை 31) விடுக்கப்பட்டுள்ளது. இதனால், நீர்நிலைக்கு அருகில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சுமார் 20 மாவட்டங்களில் கனமழை பாதிப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 17 குழுக்களும், மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 33 குழுக்களும் பல்வேறு மாவட்டங்களில் களமிறக்கப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே, வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் குஜராத்தின் நர்மதா, ஆனந்த், கெடா, சோட்டா உதய்ப்பூர், வடோதரா மற்றும் சூரத் ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
A 'Red Alert' for heavy rainfall has been issued for 13 districts of Gujarat.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழை!

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதிக முறை ரெட் கார்ட்: ஆர்ஜென்டீனா அணியின் மோசமான சாதனை!

தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!

கனமழை எச்சரிக்கை... புணேயில் இன்று(ஜூலை 6) பள்ளிகளுக்கு விடுமுறை!
விடியோக்கள்

பிடிவாதம் செய்யும் கர்நாடகம்! தமிழக எம்.பிக்கள் சொல்வது என்ன? | Karnataka | TN | Parliament




