கொல்கத்தா: தட்சிணேஸ்வர் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் மீது உயரழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில் பயங்கர சப்தத்துடன் தீப்பொறி எழுந்ததால் பயணிகள் பதறியடித்துக்கொண்டு ரயிலில் இருந்து குதித்து ஓடினர். இதில், பயணிகள் நூலிழையில் உயிர்தப்பினர், நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
கொல்கத்தாவின் தட்சிணேஸ்வர் ரயில் நிலையத்தில் புதன்கிழமை இரவு 8.50 மணியளவில் உயரழுத்த மின் கம்பி அறுந்து டன்குனி-சீல்டா வழித்தடத்தில் செல்லும் புறநகர் ரயிலின் மீது விழுந்ததால் பயங்கர சப்தத்துடன் தீப்பொறிகள் மற்றும் புகை எழும்பியதால் பெரும் விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட கடுமையான தீப்பொறிகள் மற்றும் அடர்ந்த புகையை அடுத்து பயணிகள் பதறியடித்துக் கொண்டு ரயிலில் இருந்து குதித்து ஓடினர்.
இந்த பதற்றமான சூழலில், பயணிகள் நூலிழையில் உயிர்தப்பினர், நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பு ஏற்படவில்லை. ரயிலின் உலோக உடல் அமைப்பு ஒரு பாதுகாப்பு கவசம் போல் செயல்பட்டதால், பெட்டிகளுக்குள் இருந்த பயணிகளுக்கு மின்சாரம் பாய்வது தடுக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
ரயில்வே ஊழியர்கள் அதிகாரிகள் உடனடியாக விழிப்புணர்வுடன் செயல்பட்டு அந்த பகுதிக்கான மின் விநியோகத்தை நிறுத்தி, பாதிக்கப்பட்ட வழித்தடத்தில் ரயில் சேவைகளையும் ரத்து செய்தனர். அவசரக்கால மீட்புக் குழுக்களும் ரயில்வே பொறியாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீரமைப்புப் பணிகளைத் தொடங்கினர்.
சேதமடைந்த உயரழுத்த மின் கம்பியைச் சரிசெய்ய 'டவர் வேகன்' வாகனம் பயன்படுத்தப்பட்டது; அதேவேளையில், சேவையை மீண்டும் தொடங்குவதற்கு முன் அதிகாரிகள் பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டனர். இரவு வெகுநேரம் வரை சீரமைப்புப் பணிகள் நீடித்ததால், இரு வழித்தடங்களிலும் ரயில் போக்குவரத்து பல மணிநேரம் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்தத் தடையால் அந்த வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன; சீரமைப்புப் பணிகள் நடைபெறும் வரை பயணிகள் பொறுமை காக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
உயரழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் இன்னும் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
A serious train accident was averted at Dakshineswar railway station in Kolkata when an overhead electric wire snapped...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
ரயில் நிலையத்தில் மாணவா்கள் மோதல்: 10 போ் மீது வழக்குப் பதிவு; 3 போ் கைது

41 புறநகர் ரயில்கள் ரத்து: தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்

ராட்சஸ பாய்லா் லாரி மோதி உயரழுத்த மின் கம்பி துண்டிப்பு
விடியோக்கள்

பிடிவாதம் செய்யும் கர்நாடகம்! தமிழக எம்.பிக்கள் சொல்வது என்ன? | Karnataka | TN | Parliament




