மகாராஷ்டிரம் மாநிலம் பிவாண்டியில் நான்கு தளங்கள் கொண்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 9 பேர் பலியாகினர்; மேலும் 7 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
இது குறித்து பிவாண்டி நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:
மகாராஷ்டிரம் மாநிலம் பிவாண்டி உள்ள பவர்லூம் (விசைத்தறி) நகரமான பாலாஜி நகரில், நான்கு தளங்கள் கொண்ட ஒரு குடியிருப்பு கட்டடம் வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்துள்ளது. அந்த கட்டடத்தில் ஒவ்வொரு தளத்திலும் 12 வீடுகள் என மொத்தம் 48 வீடுகள் இருந்தன. மேலும், உள்ளாட்சி அமைப்பால் இது ஆபத்தான கட்டடம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கட்டடத்தில் விரிசல் விழுந்து சப்தம் வந்தபோது, சில குடியிருப்பாளர்கள் கட்டடத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தபோதே, கட்டடத்தின் 'பி' பிரிவு பகுதி இடிந்து விழுந்ததாகவும், இடிபாடு சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள், பல குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்ற உதவியுள்ளனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர். அவர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்களின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன, ஆறு முதல் ஏழு பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படை, தாணே பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் தீயணைப்புத் துறை ஆகியவற்றின் குழுக்கள் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. சம்பவ இடத்தில் மோப்ப நாய் படை, நான்கு தீயணைப்பு வாகனங்கள், இரண்டு ஆம்புலன்ஸ்கள் மற்றும் கனரக மண் அகற்றும் இயந்திரங்கள் ஆகியவை மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த சிறுவன் ஒருவனை மீட்புப் படையினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர்.
Summary
Nine killed as residential building collapses in Maharashtra's Bhiwandi; seven still feared trapped under debris
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மும்பையில் கனமழை: 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி!
கொல்கத்தா கட்டட விபத்து: உயிரிழப்பு 11-ஆக அதிகரிப்பு

மேற்கு வங்கம்: மூன்று கட்டடம் இடிந்து 3 போ் உயிரிழப்பு- 18 போ் மீட்பு

மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி
விடியோக்கள்

தவெக அமைச்சர்களுக்கு தெளிவான சிந்தனை இல்லை! தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்! | TVK | BJP




