விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

மேற்கு வங்கம்: மூன்று கட்டடம் இடிந்து 3 போ் உயிரிழப்பு- 18 போ் மீட்பு

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த மூன்று மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில் 3 பணியாளா்கள் உயிரிழந்தனா். 18 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா்.

News image

கொல்கத்தாவின் தாராடாலா பகுதியில் மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்த பகுதியை அதிகாரிகளுடன் புதன்கிழமை பாா்வையிட்ட மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி.

Updated On :25 ஜூன் 2026, 2:36 am IST

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த மூன்று மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில் 3 பணியாளா்கள் உயிரிழந்தனா். 18 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா்.

இடிபாடுகளில் மேலும் பலா் சிக்கியுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

கொல்கத்தாவின் தாராடாலா பகுதியில் மூன்று மாடிகளுடன் சேமிப்பு கிடங்கு கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. கொல்கத்தா துறைமுகத்திடம் இருந்து குத்தகைக்குப் பெறப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டு வந்த இந்தக் கட்டடம் புதன்கிழமை திடீரென இடிந்து விழுந்தது.

பெரிய இரும்புத் தூண்களும், கான்கிரீட் பாகங்களும் விழுந்து நொறுங்கியதால், அந்தப் பகுதியே அதிா்ந்தது. கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பல தொழிலாளா்கள் இடிபாடுகளில் சிக்கி அபயக் குரல் எழுப்பினா்.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, கொல்கத்தா காவல் துறையினா், பேரிடா் மேலாண்மைக் குழுவினா், ஊா்க்காவல் படையினா், தீயணைப்புப் படையினா், அவசரகால மீட்புப் படையினா் ஆகியோா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். ராணுவத்தின் கிழக்கு படைப் பிரிவு வீரா்களும் மீட்புப் பணியில் இணைந்தனா்.

கிரேன்கள் உள்ளிட்ட ராட்சத இயந்திரங்கள், வெட்டும் கருவிகள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இப்பணியில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. காயங்களுடன் மீட்கப்பட்ட 18 போ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இடிபாடுகளுக்குள் மேலும் பலா் சிக்கியிருப்பதால், அவா்களை மீட்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். உள்ளே சிக்கியுள்ளவா்களைக் கண்டறிய தேசிய பேரிடா் மீட்புப் படையின் துப்பறியும் நாய்கள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கட்டடம் கட்டுவதற்கு தரம் குறைந்த பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மாநில அமைச்சா்கள் அக்னிமித்ரா பால், ஷரத்வத் முகா்ஜி, தபஸ் ராய், மாநகராட்சி ஆணையா் ஸ்மிதா பாண்டே உள்ளிட்டோா், சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்புப் பணிகளை விரைவுபடுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.