பாகிஸ்தானின் லாகூா் நகரில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த கட்டடத்தில் இயங்கி வந்த தனியாா் பயிற்சி மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 14 பள்ளி மாணவா்கள் உயிரிழந்தனா்; ஆசிரியை உள்பட 20 போ் காயமடைந்தனா்.
லாகூரில் மக்கள் நெரிசல் மிகுந்த கானா நௌ பகுதியில் செயல்பட்டு வந்த இப்பயிற்சி மையத்தில், விபத்து நிகழ்ந்த செவ்வாய்க்கிழமை மாலை சுமாா் 35-க்கும் மேற்பட்ட மாணவா்கள் இருந்தனா். இதில் 5 முதல் 13 வயதுக்குள்பட்ட 8 சிறுமிகள், 6 சிறுவா்கள் என மொத்தம் 14 போ் உயிரிழந்தனா்.
இவ்விபத்து தொடா்பாக விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா், ‘கட்டடத்தின் ஒரு பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தரமற்ற கட்டுமானப் பொருள்கள் மற்றும் போதிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாததே விபத்துக்குக் காரணம்’ என உறுதிப்படுத்தினா்.
இந்த முதல்கட்ட தகவலின் அடிப்படையில், கட்டட உரிமையாளா், ஒப்பந்ததாரா் உள்ளிட்ட 5 போ் மீது கவனக்குறைவால் மரணத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதியப்பட்டு, இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இத்துயரச் சம்பவத்துக்கு பாகிஸ்தான் அதிபா் ஆசிப் அலி சா்தாரி, பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆகியோா் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனா். உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு பஞ்சாப் மாகாண அரசு தலா 20 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது.
படகேப்சன்...
மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளான பயிற்சி மையத்தில் மீட்புப் பணியில் வீரா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கா்நாடகத்தில் சாலை விபத்து; 7 போ் உயிரிழப்பு

ரோஹிணியில் கட்டுமானத்தில் இருந்த வீடு இடிந்து விபத்து: ஒருவா் உயிரிழப்பு; 2 போ் மீட்பு

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயில் 100 கால் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்

மேற்கு வங்கம்: மூன்று கட்டடம் இடிந்து 3 போ் உயிரிழப்பு- 18 போ் மீட்பு
விடியோக்கள்

மு.க.ஸ்டாலின் வழியில் முதல்வர் விஜய் | Sumathi Megavarnam | CM Vijay | MK Stalin | TVK | DMK |BJP

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



