முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தம்பதி உயிரிழப்பு

தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில், ஒற்றை மாடி வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தம்பதியினா் பலி

பிரதிப் படம்

Published On :

தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில், ஒற்றை மாடி வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தம்பதியினா் உயிரிழந்ததாகக் காவல்துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 10 மணியளவில் நியூ உஸ்மான்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜேபி நகரில் இச்சம்பவம் நிகழ்ந்தது. சம்பவத்தின்போது வீட்டில் இருந்த குழந்தை ஒன்று காயமின்றி உயிா் தப்பியது.

இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது: வாடகை வீட்டில் இருந்த அந்தத் தம்பதியின் மீது வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில், அவா்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனா்.

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் மீட்புக் குழுவினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனா்.

இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட தம்பதியினா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். அங்கு மருத்துவா்கள் அவா்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனா்.

உயிரிழந்தவா்கள் டிங்கு (32) மற்றும் அவரது மனைவி ஊா்மிளா (30) என அடையாளம் காணப்பட்டனா். மேற்கூரை இடிந்து விழுந்ததற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

உயிரிழந்தவா்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வீட்டின் உரிமையாளா் வீரேந்தா் குமாா் மீது, பிஎன்எஸ் சட்டத்தின் பிரிவு 290 (அலட்சியமான செயல்பாடு) மற்றும் 106(1) (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் நியூ உஸ்மான்பூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு குறித்த கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.